சீமான் அண்ணன் விண்வெளிக்கு சென்றால்.. ப்ளூசட்டை மாறனை கதற விடும் தம்பிகள்.. குசும்புதாயா உனக்கு!
சென்னை: பாஞ்சாலங்குறிச்சி, தம்பி போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் நாம் தமிழர் சீமான். தமிழ் மீது இவர் வைத்திருக்கும் பற்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. இருப்பினும், நடிகையை காதலித்து ஏமாற்றியதாக வந்த புகாரில் சிக்கி தவித்து வருகிறார். அவ்வப்போது இவர் திரித்து பேசுவதில் வல்லவர் என்றும் சிலர் கடுமையாக விமர்சிப்பார்கள். தற்போது, அண்ணன் சீமான் விண்வெளிக்கு சென்றால் என்ன சொல்வார் என சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தலைவருக்கு குசும்பு அதிகம் என நெட்டிசன்கள் வசைபாட தொடங்கிவிட்டனர்.
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் தனது எக்ஸ் தளத்தில் அவர்கள் முன்பு பேசிய வீடியோக்களை பகிர்ந்து விமர்சனம் செய்வார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு அரசியல் தலைவர்களை காட்டிலும் இவர்தான் அதிகமாக பங்கமாய் கலாய்த்து பேசி வருகிறார்., அதற்கு அவரது ரசிகர்களும் ப்ளூசட்டை மாறனை விமர்சித்தும் வருகின்றனர். தற்போது ப்ளூசட்டை மாறனிடம் சிக்கியது விஜய் அல்ல அண்ணன் சீமான் தான். நாம் தமிழர் சீமான் பெயருக்கு பின்னால் சர்ச்சைகளும், பொய்களும் தான் அதிகம் இருக்கிறது என முன்னதாக ப்ளூசட்டை மாறன் விமர்சித்திருந்தார்.

விண்வெளி வீரரான சீமான்: இந்தியாவே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பூமிக்கு தரையிறங்கியதை நினைத்து மனம் நெகிழ்ந்து போனார்கள். பலரும் சுனிதா வில்லியம்ஸை தெய்வப்பிறவி என்றும் போற்றி வருகின்றனர். சிலர் அவர் நலமுடன் இருக்க பூஜையும் செய்கின்றனர். ஆனால், ப்ளூசட்டை மாறனோ கொஞ்சம் வித்தியாசமாக சீ்மான் அண்ணன் விண்வெளிக்கு சென்றால் எப்படி இருக்கும் என்பது போன்ற சித்தரிப்பு வீடியோவை பதிவிட்டு பங்கமாய் கலாய்த்துள்ளார். சுனிதா வில்லியம்ஸை மிஞ்சிய விண்வெளி வீரர் அண்ணன் சீமான் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
நாசாவுக்கு தக்லைஃப்: சமீபத்தில் இணையத்தில் டிரெண்டாகி வரும் தாய்லாந்து பாடல் ஒன்று அண்ணனை பாத்தியா பாடலை சீமான் பாடுவது போன்று சித்தரித்து வெளியிட்டனர். அதுவும் சீமான் கலந்துகொள்ளும் விழாமேடைகளில் இளையராஜா அல்லது அவர் ரசித்த பாடல்களை பாடி ரசிகர்களை குதூகலப்படுத்துவார். அப்படி நீயா நானா கோபிநாத் கேட்டதும் அவர் பாடுவது சினிமா பாடல் என்று எதிர்பார்த்தபோது அது டிரெண்டிங் பாடலாக இருந்ததை கண்டு சிரித்து ரசித்தனர். அதேபோன்று தற்போது நாசாவுக்கே அண்ணன் தக்லைஃப் கொடுப்பாரு என ப்ளூசட்டை மாறனின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சீமான் ஆதரவாளர்கள்: தற்போது சீமானின் ஆதரவாளர்கள் ப்ளூசட்டை மாறனை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி வருகின்றனர். அதற்கு ப்ளூசட்டை மாறன் சளைத்தவர் அல்ல என்பது போல் அண்ணனின் விழுதுகள் ரொம்ப பொங்கிட்டாங்க. இதைவிட ஸ்பெஷல் இருக்கு காத்திருக்க தம்பிகளே என பதில் அளிக்க தொடங்கிவிட்டார். அதற்கும் சீமானின் ஆதரவாளர்கள் கெட்ட வார்த்தையில் திட்டி, உனக்கு சீமானை தவிற வேறு யாரும் கிடைக்காது அதனால் அவரையே விமர்சித்து வருகிறாய் என்றும் ஒருமையில் பேசியுள்ளனர். தம்பிகளா விஜய், உதயநிதி எல்லாரையும் தான் பேசுறேன். உங்களுக்கு அறிவு பத்தலை என ப்ளூசட்டை மாறன் தக்லைஃப் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











