ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து.. என்னப்பா இதே செய்தியா இருக்கு.. கேலி செய்யும் ப்ளூசட்டை மாறன்!
சென்னை: பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் நிலையில், இன்று மனப்பூர்வமாக பிரிந்து வாழ ஆசைப்படுகிறோம் என தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தமிழ் சினிமாவில் சினிமா பிரபலங்கள் விவகாரத்து பெறுவது அதிகரித்து வரும் நிலையில், இதனை கிண்டல் செய்து பிரபல சினிமா விமர்சகர் பதிவிட்டிருப்பது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் சினிமா பிரபலங்கள் பலரும் விவகாரத்து பெறுவது ஒன்றும் புதிது இல்லையென்றாலும் அது அதிகரித்து காணப்படுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகர் கமல் முதல் தனுஷ் வரை தொடர்கிறது. ஏற்கனவே பிரிந்த வாழ்ந்து வந்த ஜோடிகள் விவாகரத்து அறிவித்ததும், யாரும் எதிர்பார்க்காத ஜோடிகள் திடீரென பிரிவை அறிவித்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் 2004 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், 20 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு நவம்பரில் விவாகரத்தை அறிவித்தனர். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு, இயக்குநர் விஜய் - அமலா பால் விவகாரத்து பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தனுஷ் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதேபோன்று ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அவரது முதல் கணவர் அஸ்வினை விட்டு பிரிந்து பின்னர் சட்டப்படி விவகாரத்து பெற்றார். அதைத்தொடர்ந்து விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
பின்பு சமந்தா,டி.இமான் போன்றோரும் விவகாரத்து பெற்றனர். சமந்தா நாகசைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டது, ஆனால், அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் தனது சினிமா கரியரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லமுயற்சித்து வருகிறார். அதன்பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் டி.இமான் தனது மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான் என கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் டி.இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை மறக்கமாட்டேன். இனிமேலும் அவருடன் பணியாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார் இமான். கண் கலங்கியபடி தெரிிவத்தது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.

சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது புரியாத புதிராக இருந்தாலும், அந்த பகை புகைந்துகொண்டுதான் இருக்கிறது. பின்னர், இசையமைப்பாளர் இமான் கோலிவுட் நடிகர் உபால்டின் மகளான அமெலியாவை இசையமைப்பாளர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சின்னத்திரையிலும் பிடித்த பிரபலங்கள் விவகாரத்து, தகாத உறவில் சிக்கிக்கொள்வது போன்ற செய்திகளும் வெளியாகி கசப்பான சம்பவங்களை நினைவுப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இதே நேரத்தில் கடந்தாண்டு வெளியான பிரபலங்களின் விவகாரத்து செய்திகள் தான் பெரும் அதிர்ச்சியளித்தன. நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் . இந்த நிலையில் 15 ஆண்டு கால திருமண வாழ்கைக்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. நீண்ட கால யோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதற்கு அவரது மனைவி அவர் விவகாரத்து அறிவித்ததே எங்களுக்கு தெரியாது. அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என விளக்கத்தை தந்தார். ஆனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக ஜெயம் ரவியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இது ஜெயம் ரவியை மட்டும் அல்ல அவரது குடும்பத்தினருக்கும் அதிருப்தியான செய்தியாக மாறியது. விவகாரத்து தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளன.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு, ஆகியோர் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு நவம்பரில் விவாகரத்தைக் அறிவித்தனர். அவர்களுக்குத் கத்திஜா, ரஹீமா, மற்றும் ஏ.ஆர். அமீன் என 3 பிள்ளைகள் உள்ளனர். இது திரையுலகை மட்டும் அல்லாது, ரசிகர்களுக்கும் ஹார்ட் பிரேக்கிங் செய்தியாகவே இருந்தது. சமீபத்தில் உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஹ்மானிற்கு திரை பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அவரது மனைவி சாயிரா பானு முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்தார்.
அவர்களை தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்வதாக டிசம்பர் 12 ம் தேதி அறிவித்தார். பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியுடனான 17 வருட திருமண வாழ்வை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் \அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என தெரிவித்துக்கொண்டார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தான் சிறு வயது முதல் காதலித்து வந்த பின்னணி பாடகியான சைந்தவியை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 11 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக மே 13 ஆம் தேதி அறிவித்தார். இவர்களுக்கு அன்பி என்ற ஒரு மகள் உள்ளார்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இசை மேடைகளில் ஒன்றாகவே பயணிக்கின்றனர். ஈகோ இல்லாமல் பயணித்து வருகின்றனர். சமீபத்தில் பிறை தேடும் இரவிலே பாடலில் இருவரும் ஒரே மேடையில் இருக்கும் வீடியோ வைரலானது. விவகாரத்து பெற்று ஒவ்வொருவரும் தனித்தனியாக சண்டை போடுபவர்கள் மத்தியில் இருவரும் ஒன்றாக நண்பர்களாக பயணிப்பது வியப்பை அளித்தது. ரசிகர்களும் பெருமிதம் கொண்டனர். இன்று இருவரும் பிரிந்து வாழ ஆசைப்படுவதாக தெரிவித்தனர். ஒரே காரில் இருவரும் பயணித்தனர். இதுகுறித்த செய்திகளும் வெளியானது.

இந்நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இன்றைய காலத்தில் விவகாரத்து பெறுவது அதிகமாகிவிட்டது. மேலை நாடுகளில் Prenup என்ற வழிபாடு இந்தியாவில் வெகுவிரைவில் சட்டமாக்க வேண்டும். இல்லையெனில் கல்யாணம்னு சொன்னா தலை தெரிச்சு ஓடிடுவான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். ஆனால், இது ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியும் இன்று தான் கோர்ட்டில் விவகாரத்து கேட்டு ஆஜராகினர் இதனை கிண்டல் செய்யும் விதமாக அவர் பதிவிட்டிருப்பதாக விமர்சிக்க தொடங்கினர் நெட்டிசன்கள். சிலர் ஆதரவும் தெரிவித்து போஸ்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











