இதயம் நொறுங்க வைத்த பிரபலங்களின் மரணங்கள்.. சிறிய வயதில் மாரடைப்பு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பங்கள்

சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் மரணம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று மாலை மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். வாழும் வயதிலேயே இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார் என திரை பிரபலங்கள், அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி கிடக்கின்றனர். மகனை இழந்த துக்கத்தில் செய்வதறியாது நிற்கிறார் பாரதிராஜா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினரும் அவரது மனைவி மகள்களுக்கும் திரை பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மனோஜ் பாரதிராஜா இறப்பு யாராலும் ஏற்க முடியாத ஒன்று தான். அவர் 48 வயதில் அடைந்திருக்கும் மரணத்தை எண்ணி துயருற்று நிற்கிறார் பாரதிராஜா. இதேபோன்று தமிழ், கன்னடம் என பிற மொழி நடிகர்களும் சிறு வயதில் மரணத்தால் துன்பத்திலும் அவரது குடும்பங்கள் தத்தளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி சர்ஜா: கன்னட திரையுலகில் இளம் நடிகராகவும் ஆக்சன் படங்களில் நடித்து வெற்றியும் கண்டவர் சிரஞ்சீவி சர்ஜா, பையா, காக்க காக்க, வேட்டை, மலை மலை போன்ற தமிழ் ரீமேக் படங்களில் நடித்து கன்னட திரையுலகில் பிரபலம் அடைந்தார். நடிகர் அர்ஜூனின் தம்பி மகனும் கூட. நடிகை மேக்னாவை திருமணம் செய்தும் கொண்டார். கடந்த 2020இல் 35 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பின் பெரும் சர்ச்சைகளும் வெடித்தன. போதை மருந்து என்றும் விவாதத்தை கிளப்பினர். இளம் வயது மரணம் கன்னட திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. இவரது மரணத்தால் அர்ஜூன் குடும்பம் நிலைகுலைந்து போனது. நடிகை மேக்னா அப்போது 3 மாத கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

celebrities-and-actors-who-died-at-a-young-age-in-the-film-industry

புனித் ராஜ்குமார் மரணம்: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. புனித் ராஜின் திடீர் மரணத்திற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் இணையத்தில் இரங்கல் தெரிவித்தனர். புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமார் சோர்வடைந்தார். தம்பி மரணத்தை அண்ணன் பார்ப்பது கொடுமை என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாவிட்டாலும் கண்ணீரால் தெரிவித்தார். இதயத்தை நொறுக்கும் செய்தியாகவும் இருந்தன. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகன்கள் கிடையாது. கன்னட திரையுலகில் வாழும் கர்ணணாக மட்டும் அல்லாமல் இறக்கும் போதும் தனது கண்களை தானம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். பலருக்கும் உயிர் கொடுத்து சென்றிருக்கிறார் புனித் ராஜ்குமார்.

அவர் நடிக்கும் படங்களில் பாடும் பாடல்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை தன்னுடைய செலவிற்காக ஒரு ரூபாய் கூட எடுத்தது இல்லையாம். அதை அப்படியே தனது டிரஸ்டிற்கும் பிறருக்கு உதவுவதற்காகவே அந்த பணத்தை செலவிட்டிருக்கிறார் புனித் ராஜ்குமார். அதேபோன்று ஈகோ இல்லாத ஒரு நல்ல நடிகனை இழந்துவிட்டோம் என உயர் காவல்துறை அதிகாரியே அவரை பற்றி பேசி நெகிழ்ச்சியடைய செய்தார். அவரது ரசிகர்கள் அவரது உடலை பார்க்க காத்திருக்கும் காட்சி கண்ணீரை வரவழைத்தன. செல்லமாக அப்பு என அழைக்கப்பட்டவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவியால் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

காமெடி நடிகர் விவேக்: காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை என திரை பிரபலங்கள் கண்ணீர் விட்டு அழுது தெரிவித்தனர். முன்னதாக அவரது மகன் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். அவரது மரணமும் பெரும் சர்ச்சையானது. பிறகு திரை பிரபலங்கள் மட்டும் அல்லாமல், அரசியல் பிரபலங்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். கலாமின் கனவை நிறைவேற்ற மரங்களை நட்டவர். இன்றும் அவரது கனவை விவேக்கின் மனைவி நிறைவேற்றி வருகிறார். கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக் இறந்தார் என சர்ச்சைகள் எழுந்தன. விசிக தலைவர் திருமாவளவன் கூட நேற்று நேரில் பார்த்த விவேக் இன்று பார்க்கும் விவேக்கின் உடலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவரது உடல் நிறம் மாறியிருக்கிறது என தெரிவித்தார். அதேபோன்று பெரும் சர்ச்சைகள் எழுந்து ஓய்ந்தன.

நடிகர் விவேக் அவருடன் இருந்த கலைஞர்களை வாழவைத்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் செய்யும் உதவி பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. பட நடிகர்களை தன்னுடனே வைத்து கொண்டு அவர்களுக்கு பண உதவி செய்ததும் செய்திகளாக வெளியாகி நெஞ்சை கசிய வைத்தன. வாழும் போது விவேக் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார். அதேபோன்று தனது நண்பர் செல்முருகன் விவேக் போன பின்பு தான் அநாதை ஆகிவிட்டேன். அவருடனே என்னை வைத்திருப்பார். பட வாய்ப்புகளை தேடி சென்றதில்லை. ஆனால், இப்போது எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்தார் செல் முருகன்.

பவதாரணி மரணம்: கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்த்திடாத மரணம் பவதாரணியின் இறப்பு. சிகி்ச்சைக்காக இலங்கை சென்றவர் புற்றுநோய் என்ற கொடிய நோயால் இந்த உலகை விட்டு பிரிந்தார். அவரது இரங்கல் செய்தி கேட்டு இசைஞானி இளையராஜா நொறுங்கி போனார். மெல்லிசையான குரலால் ரசிகர்களை கவர்ந்த பவதாரணியின் இறப்பை ஏற்க முடியவில்லை என ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார். அவருக்கு வயது 46ஆகும். இறக்கும் வயதா என வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும் யுவன், வெங்கட்பிரபு, கார்த்திக் அனைவரது கேள்வியும் அதுவாகவே இருந்தன. மனைவி, மகளை இழந்து இருக்கும் இளையராஜாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என பாரதிராஜா உருக்கமாக பேசியிருந்தார். பவதாரணி இளையராஜா குடும்பத்தில் செல்லப்பிள்ளை எல்லோருக்கும் பிடித்த அக்காவாக தங்கையாக வாழ்ந்திருக்கிறார். குடும்பத்தில் சின்ன பிரச்னை வந்தால் கூட யாரும் பிரிந்து போகாமல் பார்த்துகொண்டாராம்.

celebrities-and-actors-who-died-at-a-young-age-in-the-film-industry

மனோஜ் பாரதிராஜா மரணம்: நேற்று மாலை மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியுற வைத்துள்ளது. அவருடன் நெருங்கி பழகிய நண்பர்கள், அவரது கார் டிரைவர் அனைவரும் நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என உருக்கமாக பேசி வருகின்றனர். எல்லோரும் சொல்லும் பதில் பாரதிராஜாவிற்கு எப்படி தைரியம் கொடுப்பது என தெரியவில்லை. மனுஷன் உடைந்து போய்விட்டார் என பிரபலங்கள் தெரிவிக்கின்றனர். மனோஜ் பாரதிராஜா பேசிய வீடியோக்கள், காதல் மனைவி குறித்த பகிர்ந்த விசயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த சிறு வயதில் இப்படியொரு மரணமா என்று திரையுலகினர் கண்ணீரில் மூழ்கினர்.

FAQs
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் எந்த வருடம் இறந்தார்?

2021 அக்டோபர் 29

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X