கலக்கலாய்..கலர்ஃபுல்லாய்.. பொங்கல் வாழ்த்து சொன்ன திரைப்பிரபலங்களின் பொங்கல் க்ளிக்!
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த நல்ல நாளில், பொங்கல் விழா அன்று புதுப்பானையில் பச்சரிசி வெல்லம் கலந்து பொங்கல் வைத்து உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக படையல் இட்டு கொண்டாடப்படும் விழா பொங்கல் பண்டிகை.
அந்த வகையில் கிராமப்புறங்களில் இன்றளவும் பாரம்பரியம் மாறாமல் மக்கள் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்த நல்ல நாளில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் இணைந்து பொங்கலை கொண்டாடியதோடு, தங்களது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அயலான் பொங்கல்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையொட்டி அயலான் திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த படம் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்படம் இன்று வெளியானது. இப்படத்தை குழந்தைகள் ரசித்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மகிழ்ச்சியான பொங்கல்: நடிகை கீர்த்தி சுரேஷ் தன் நண்பரும் நடிகருமான கதிர் உள்ளிட்டோருடன் பொங்கல் வைத்து குலவையிட்டு மியூசிக்கல் சேர் விளையாட்டு விளையாடி மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார். நடிகை கீர்ததி சுரேஷ் தற்போது இந்தியில் ரீ மேக்காக உள்ள தெறி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

தை திருநாள் வாழ்த்து: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரான ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கிய வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் கதையின் லீட்ரோலில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பொன்னியின் செல்வர் ஜெயம் ரவி தை திருநாளில் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அருண்விஜய்: இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 'அச்சம் என்பது இல்லையே'. இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.12 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் குவித்து வரும் நிலையில், அருண் விஜய் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் வாழ்த்துக்கள்: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் திவ்ய தர்ஷினி. ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைப்பார்கள். இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், காஃபி வித் டிடி, எங்கிட்ட மோதாதே, ஸ்பீடு என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டும் டிடி, தனது அக்கா,மாமா மற்றும் அக்கா மகனுடன் பொங்கலை கொண்டாடி உள்ளார்.

தர்ஷா குப்தா: சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் இளம் நடிகைகளாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாவணியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக அன்பும் ஆசையும் பொங்க இன்பமும் இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க, பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள் என தமிழில் பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











