நயனும், விக்னேஷும் கலக்குறாங்க.. சென்னையில் இப்படி ஒரு ஸ்டுடியோவா.. பார்க்க பார்க்க பிடிக்குதே!

சென்னை: தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா, தொழிலிலும் மாஸ் காட்டி வருகிறார். திருமணத்திற்கு பிறகு காஸ்மெட்டிக்ஸ். ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நயன்தாரா செய்து வருகிறார். விக்னேஷ் - நயன் தம்பதி எதை தொட்டாலும் சக்சஸ் தான் தற்போது சினிமா பிரபலங்கள் வியக்கும் வகையில் தேனாம்பேட்டையில் புதியதாக ஒன்றை தொடங்கி அசத்தியுள்ளனர். இதற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீசரை பார்த்த கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் பாராட்டி பேசியிருந்தார். சித்தார்த் இப்படத்தில் கிரிக்கெட் வீரரை போன்று வாழ்ந்திருப்பதாகவும், மிகவும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

nayanthara-vignesh-shivan-open-for-new-home-studio

மூக்குத்தி அம்மன் 2: அரண்மனை சீரிஸ் படங்கள இயக்கி வெற்றி பெற்றவர் சுந்தர் சி. குறைந்த பட்ஜெட்டில் பெரிய லாபத்தை ஈட்டித் ,தரும் திறமை படைத்தவர். தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவை வைத்து இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை பெரிய செட் அமைத்து பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இதில், திரை பிரபலங்கள், 90களில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளும் வந்து கலந்துகொண்டனர். நயன்தாராவிற்கு பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் மூக்குத்தி அம்மன் தான். அதன் 2ஆம் பாகத்தில் அவர் நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகர்களின் படங்களை போன்று இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்: தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டாப் நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவை தாண்டி சொந்தமாக தொழில் தொடங்கி சாதித்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இணைந்துள்ளனர், சூரரை போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி ஹிப்ஸ்வே என்ற பெயரில் ஆடை விற்பனையை நடத்தி வருகிறார். அதே போன்று நயன்தாராவும் 9 ஸ்கின் என்ற பெயரில் உடை, ஆடை அலங்காரம், அழகு பொருட்களை விற்கும் கடைகளை தொடங்கி நயன்தாரா நடத்தி வருகிறார். அதேபோன்று நடிகை இனியா அனோரா ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

புகழ்பெற்ற முன்னணி நடிகையாக இருக்கும் சினேகா தி நகரில் சினேகாலயா சில்க்ஸ் என் பட்டுப்புடவை கடையை தொடங்கியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் காஜல் பை காஜல் என்ற பெயரில் அழகு சாதன பொருட்களை விற்க தொடங்கியுள்ளார். இவ்வாறு பல்வேறு பிரபலங்களும் பிடித்த தொழிலை தொடங்கி கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர்.

nayanthara-vignesh-shivan-open-for-new-home-studio

புதிய ஸ்டுடியோ: சினிமாவில் புதிய அத்தியாயமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தற்போது
சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலணியின் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்கும் பங்களாவை ஸ்டுடியோவாக மாற்றியுள்ளனராம். இதற்கு நிகிதா ரெட்டி என்ற பிரபலம் தான் மாஸ்டர் பிளானாம். இந்த ஸ்டுடியோ அதிகம் வெளிச்சம் தரும்படியான கட்டமைப்புடன் ரசனை மிகுந்த அளவில் தயார் செய்துள்ளனராம். ஸ்டியோவுக்குள் பலவித கைவிணை பொருட்கள், விசாலமாக இருக்கும் மாடி, அறைகள் முழுவதும் ஜொலிக்கின்றனவாம். மாஸா கிளாஸாக இந்த ஸ்டுடியோ உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

FAQs
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து ஆர்ஜே பாலாஜி விலகியது ஏன்?

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க தன்னிடம் ஐடியா இல்லை என்றும் சுந்தர். சி இயக்குவது மகிழ்ச்சி என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X