Vijay Sethupathi: விஜய் சேதுபதியுடன் சிம்புவின் தங்கை... அடடே எவ்ளோ க்யூட்டா இருக்காங்க!
சென்னை: விஜய் சேதுபதி தற்போது மகாராஜா, ட்ரெய்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவருடன் பத்து தல படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்த அனு சித்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் சேதுபதியுடன் அனு சித்தாரா
கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல், கேமியோ, வாய்ஸ் ஓவர் மட்டும் என விஜய் சேதுபதியின் சேவை, சினிமாவுக்கே தேவை என்றாகிவிட்டது. சமீபத்தில் ஷாருக்கானுடன் அவர் நடித்த ஜவான் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
அதேபோல், இனி வில்லனாக நடிக்கப் போறதில்லை எனவும் விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார். வில்லன் கேரக்டருக்காக ரிஸ்க் எடுத்து நடிப்பதையெல்லாம் ரஸ்க் போல எடிட்டிங்கில் தூக்கி விடுவதாக தனது வேதனையை ஓபனாக கூறியிருந்தார். தற்போது மகாராஜா, ட்ரெய்ன், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.
அதில், விஜய் சேதுபதியுடன் மலையாள நடிகை அனு சித்தாரா இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியான பத்து தல படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்திருந்தார் அனு சித்தாரா. மல்லுவுட்டின் முன்னணி நடிகையான அவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரும் விஜய் சேதுபதியும் சந்தித்துக்கொண்ட போது ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதேநேரம், விஜய் சேதுபதியும் அனு சித்தாராவும் ஒன்றாக நடிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இந்த போட்டோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா அல்லது ஏதேனும் நிகழ்ச்சியின் போது க்ளிக்கியதா என்றும் தகவல் இல்லை. விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட போடோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் அனு சித்தாரா. மேலும், இது அற்புதமான தருணம், எளிமையான மனிதர் விஜய் சேதுபதி சேட்டாவுடன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி - அனு சித்தாரா இருக்கும் இந்தப் போட்டோ மலையாள ரசிகர்களிடமும் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் சேதுபதிக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











