twitter
    Celebs»Amala Paul»Biography

    அமலா பால் பயோடேட்டா

    அமலா பால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். மலையாளத்தை தாய் மொழியாய் கொண்டுள்ள இவர், 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். 2010-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் இவர் பிரபலமானவர்.

    பிறப்பு

    அமலா பால் கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர் ஆவார். கேரளாவில் உள்ள ஆளுவ நகரத்தில் உள்ள நிர்மலா மேல்நிலை பள்ளியில் கல்வி கற்ற இவர், தனது இளங்கலை படத்திற்காக கொச்சினில் உள்ள ஸ்ட.தெரசா கல்லூரியில் ஆங்கிலம் சார்ந்த பட்ட படிப்பினை கற்றுள்ளார்.

    திரையுலக அறிமுகம் / தொடக்கம்

    தனது கல்லூரி காலங்களிலே மேடை நாடகத்தில் நடித்துள்ள இவர் நடிப்பில் ஆர்வம் கொண்டு திரையுலகில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். கேரளாவில் உள்ள மாடலிங் பணியில் பணியாற்றிய இவருக்கு 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 

    இவர் நடித்த மலையாள திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010-ம் ஆண்டு நடித்த வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்யாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இவர் நடித்த மைனா திரைப்படமானது தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருதினை பெற்றுள்ள இவர், பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் மற்றும் சிறந்த நடிகைக்கான விஜய் விருது ஆகிய அமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    இவர் இத்திரைப்படத்தினை தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் திரைத்துறையில் நட்சத்திர நடிகையாக உயர்ந்துள்ளார்.
     
    நடிகை அமலா பால் நடித்த திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு
     
    திருமணம்

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இவரும் இத்திரைப்பட இயக்குனரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஜூன் 12, 2014-ல் திருமணம் கேரளா மற்றும் சென்னை என இரு இடங்களில் நடந்துள்ளது. பின்னர் இவர் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.

    நடிகை அமலா பால், 2020-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியில் தனது நண்பரை காதலித்து மறுமணம் செய்துள்ளார். இவர் திரைத்துறைக்கு அப்பாற்பட்ட ஒரு தொழிலதிபர் ஆவார்.