twitter
    Celebs»Dhivyadharshini»Biography

    திவ்யதர்ஷினி பயோடேட்டா

    திவ்யதர்சினி - தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி. இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.

    அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    திவ்யதர்சினி நகைச்சுவை & துள்ளலான பேச்சால் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். 

    விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் விகடன் வழங்கியது.