கணேஷ் வெங்கட்ராமன்
Born on 20 Mar 1980 (Age 44) மும்பை
கணேஷ் வெங்கட்ராமன் பயோடேட்டா
கணேஷ் வெங்கட்ராமன் இவர் ஒரு மாடல் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஆகும். இவர் அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
கணேஷ் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவரின் அப்பா அம்மா தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். இவர் 2003ம் ஆண்டு நடந்த "மிஸ்டர் இந்தியா 2003" வெற்றியாளர் ஆவார். அதே ஆண்டில் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற சூப்பர் மாடல் போட்டியில் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார்.
இவருடைய கல்லூரி நாட்களில், இவருக்கு மாடலிங் மற்றும் நடிப்பு நோக்கி கவனம் இருந்தது. தனது கல்லூரியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார். முறையான கல்வியை முடித்த பின்னர், மென்பொருள் வல்லுநராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இவர் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்தார். இயக்குனர் முருகதாஸ் ஒரு விளம்பரத்துக்காக கணேஷ் வெங்கட்ராமனை தேர்வு செய்தார்.
இவர் இதுவரைக்கும் 200 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயாவி 3டி தொடர் முலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். உலகில் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட 3டி தொடர் இதுவாகும்.