twitter
    Celebs»Jayalalithaa J»Biography

    ஜெ ஜெயலலிதா பயோடேட்டா

    ஜெ ஜெயலலிதா முன்னாள் தமிழக முதல்வரும், அனைந்ததிந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொது செயலாளர், தென்னிந்திய திரைப்பட நடிகையுமாவார். இவர் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து பணியாற்றினர். இவர் 5-ஆவது முறையாக ஆட்சியில் இருக்கும் பொழுது தான் இவ்வுலகினை விட்டு உயிர் நீர்த்தார். 

    செல்வி ஜெயலலிதா ஒரு நடிகையாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 120-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 70'களில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தவராவார். 

    அறிமுகம் :

    கோமளவல்லி ஜெயராம் என்ற ஜெயலலிதா பிப்ரவரி 24 1948-ல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை என்ற ஊரில் ஜெயராம் வேதவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். கோமளவல்லிக்கு இரண்டு வயது ஆனா போனது அவரது தந்தை காலமானார். அதன் பிறகு அவரது தாய் வேதவல்லி என்ற பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டு திரையில் நடிக்க ஆரம்பித்தார். 

    1958 முதல் 1964 வரை ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பள்ளியிலே படித்தார். மேடை நாடகங்களில் ஆர்வம் உள்ள ஜெயலலிதா பல்வேறு மேடை நடங்களில் நடித்துள்ளார். வளர்ந்தது கர்நாடக மாநிலமாக இருந்தாலும், இவர் நடிப்பு துறையில் முதன் முதலில் கால்பதித்தது ஏனோ தமிழில் தான். 1965-ல் வெண்ணிற ஆடை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமே திரைக்கு அறிமுகமானார். 

    திரைத்துறை :

    மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜெயலலிதா. அன்றைய முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ் மாற்றும் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 

    இதில் 28 படங்கள் எம் ஜி ஆருடன் இணைந்து நடித்துள்ளார். அதனாலயே ஜெயலலிதாவுக்கும் எம் ஜி ஆருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டு, பின்னாளில் அந்த நட்பு அரசியலிலும் தொடர்ந்தது. 


    அரசியல் : 

    1981-ல் அ. தி. மு. க -வில் கொள்கை பரப்பு செயலாளராக இணைந்தார். அதனை தொடர்ந்து 1984-ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 185-ஆவது இருக்கையை பெற்றார். அந்த இருக்கை அண்ணாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட இருக்கையாகும். 

     அ. தி. மு. க கட்சியின் தலைவரும், நடிகரும், முதலமைச்சருமான எம் ஜி ஆர் இறப்பிற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து தன்னை அவரது அரசியல் வாரிசாக அறிவித்துக்கொண்டு 1989-ல் ஜெயலலிதா அ. தி. மு. க-வின் தலைமை பொறுப்பேற்று பொதுச்செயலாளர் ஆனார். 

    எம் ஜி ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனுக்கு பிறகு தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வரானார் ஜெயலலிதா. 

    91-96 தமிழக முதல்வராக இருந்தபொழுது வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்துவைத்ததன்  காரணமாக இவர் மேல் சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. அதனால், 2014 அக்டோபர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பதவியில் இருக்கும் பொழுதே சிறைக்கு சென்று பதவி பறிக்கப்பட்ட முதல் இந்திய மாநில முதலமைச்சர் இவரே ஆவர். அதன்பின் மே 11-ல் இவரை வழக்கிலிருந்து கர்நாடக அரசு விடுவித்தது. அதன் பின்னரே இவர் 5 -ஆவது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

     தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய பெருமையும் ஜெயலலிதாவையே சேரும்.

    1991 முதல் 5 டிசம்பர் 2016 வரை தனி ஒரு பெண்மணியாக ஒரு மாபெரும் கட்சியினை உருவாக்கி ஆளுமை செய்து வந்தார். 

    'அம்மு' என்று அழைக்கப்பட்டவர், 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அன்று முதலே "அம்மா" என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.

    இறப்பு :

    2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். 

    மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதன் பிறகு 6 டிசம்பர் 2016 மாலையில் எம் ஜி ஆர் சமாதிக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டது.