twitter
    Celebs»Jayam Ravi»Biography

    ஜெயம் ரவி பயோடேட்டா

    ஜெயம் ரவி, ரவி என்ற இயற்பெயர் கொண்டு திரையுலகில் நடிகராக ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி என அறியப்பட்டார். இவரின் முதல் திரைப்படமே இவருக்கு திரையுலகில் அடையாளமாக மாறியுள்ளது.


    பிறப்பு

    இவர் மதுரையில் 1980-ஆம் ஆண்டு வெட்டறான் திரைப்பட தொகுப்பாளர் மோகன், வரலட்சுமி மோகன் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். இவருக்கு ராஜா என்னும் தமயனும், ரோஜா என்ற சகோதரியும் உள்ளனர்.

    இவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பினை முடித்துள்ள இவர், சென்னை லொயோலா கல்லூரியில் தந்து இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.



    திரையுலக தொடக்கம் / அறிமுகம்

    ஜெயம் ரவி 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 

    இவர் சிறுவயதில் பாவ பாவமரிடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் நடிப்பு அனுபவத்தை பெற்றுள்ளார்.

    இவர் தமிழ் திரையுலகில் இவரின் அண்ணன் இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு இவரின் தந்தை மோகன் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று தமிழகத்தில் பிரபலமாகியுள்ளார்.

    திரைப்பயணகள் 

    ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 2002ல் இதேபெயரில் வெளியிடப்பட்டது. ஜெயம்திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சமி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற பெயரில் வெளிவந்தது. 

    ஒரு எதார்த்தமான காதல் திரைக்கதையில் அறிமுகமான இவர், ஜெயம் திரைப்படத்தினை தொடர்ந்து நகைச்சுவை, காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் நடித்து புகழ் பெற்ற பின்னரே அதிரடி நாயகனாக திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். 

    ஒரு அதிரடி படமாக ஹாலிவுட் தரத்தில் இவர் நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படத்திலிருந்த்து இவர் அதிரடி நாயகனாகவும் தமிழ் திரையுலகில் சித்தரிக்கப்பட்டார். பின்பு அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் இவரும் ஒருவராவார்.

    அங்கீகாரம்

    இவர் 2004-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை எம் குமரன் திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பேராண்மை, ரோமியோ ஜுலேட், தனி ஒருவன், பூலோகம், அடங்காமாறு படத்திற்காக பல விருதுகளை சீமா, எடிசன், விகடன் பிலிம்பேர் என பல தரப்பு அமைப்புகளிடம் இருந்து பல விருதுகளை வென்றுள்ளார்.