twitter
    Celebs»Kasthuri»Biography

    கஸ்தூரி பயோடேட்டா

    கஸ்தூரி இந்திய தமிழ் திரையுலகின் நடிகை ஆவார். இவர் 1991-ம் ஆண்டில் "ஆத்தா உன் கோயிலே" என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    பிறப்பு
    தமிழகத்தில் சென்னையில் பிறந்த இவர் பள்ளி பருவ காலத்திலே இருந்து சிறந்தோங்கி விளங்கியுள்ளார். இவரின் தந்தை ஒரு பொறியாளரும், தாய் வழக்கறிஞரும் ஆவார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பின்னர் இவர் மாநில அளவில் ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ஆவார். 

    திரையுலக தொடக்கம்
    இவர் 1992-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் தலைப்பினை வென்றுள்ளார். பின்னர் 1994-ம் ஆண்டு இந்திய அளவிலான அழகி போட்டியில் பங்கேற்றுள்ளார். 1991-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை தென்னிந்திய மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர், திரைப்படங்களுக்கு ஒரு இடைவேளை விடுத்து மீண்டும் 2009-ம் ஆண்டு மலை மலை திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து திரையுலகில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

    சமூக அக்கறை / சர்ச்சைகள்
    தற்போது பல திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து வரும் இவர், சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைத்தளங்கள் மற்றும் பேட்டிகளில் கருத்து தெரிவிப்பது மூலம் பல சர்ச்சைக்கு உள்ளாகிறார்.

    பிக் பாஸ்
    இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இவர் 17-வது போட்டியாளராக வைல்ட் கார்டு என்ட்ரி வாயிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.