twitter
    Celebs»Nazriya Nazim»Biography

    நஸ்ரியா நசீம் பயோடேட்டா

    நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

    இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பை துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

    மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் சென்ற ஆகஸ்ட் மாதம் நஸ்ரியாவிற்கு திருமணம் நடைப்பெற்றது.