Celebs » Niveda Thomas » Biography
பயோடேட்டா
நிவேதா தாமஸ் என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும், மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வெறுத்தே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார். 2009ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபல்யமான நடிகை ஆனார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil