twitter
    Celebs»Pandiraj»Biography

    பாண்டிராஜ் பயோடேட்டா

    பாண்டிராஜ் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றிவருகிறார். 

    அறிமுகம்

    2009-ம் ஆண்டு பசங்க திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தயாரித்துள்ளார். மேலும் இவர் இயக்கிய முதல் திரைப்படமான பசங்க திரைப்படம் இந்திய அரசின் தேசிய விருதுடன் பல தரப்புகளில் பல விருதுகளை வென்றுள்ளது. திரைப்படத்தின் வெற்றியின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    வாழ்கை

    இவர் 1976-ம் ஆண்டு ஜூன் 7ல் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்துள்ளார். தனது படிப்பினை முடித்த பின் இவர் சென்னையில் இயக்குனர் பாயகராஜ்-யின் அலுவலக பணியாளராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் பாயகராஜ் இயக்கும் திரைப்படங்களின் கலந்தாய்வில் ஒருசில காட்சிகளை எழுதியுள்ளார். பின் திரைக்கதையில் ஆர்வம் கோண இவர் இயக்குனர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் உதவி இயக்குனராக தங்கர் பச்சன் திரைப்படத்தில் பணியாற்றி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

    பிரபலம்

    தமிழ் திரையுலக பிரபல இயக்குனர்களான பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சன், சிம்புதேவன் ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளர், அலுவலக பணியாளர், உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 2009-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் பசங்க திரைப்பத்தினை இயக்கி இயக்குனராக தமிழில் அறிமுகமாகியுள்ளார். 2009-ம் ஆண்டு மாபெரும் வெற்றிப்படமாக திகழ்ந்த இத்திரைப்படம் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்று பிரபலமானது.

    இத்திரைப்படத்தினை அறிமுகம் கொண்டு இவர் இயக்கிய திரைப்படங்களான கேடி பிள்ளை கில்லாடி ரங்கா, வம்சம், மெரினா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற்றுள்ளது. பின்னர் இவர் 2018-ம் ஆண்டு இயக்கிய கடைகுட்டி சிங்கம் திரைப்படமானது 2018-ம் ஆண்டு சிறந்த படமாக விளங்கியது.