twitter
    Celebs»Prabhas»Biography

    பிரபாஸ் பயோடேட்டா

    பிரபாஸ் இந்தியாவின் முக்கிய திரையுலக பிரபலங்களின் ஒருவராக கருதப்படுபவர். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். இவர் தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியளவில் பிரபலமானவர்.

    பிறப்பு

    பிரபாஸ் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான யு சூர்யா நாராயண ராஜு - சிவா குமாரி தம்பதியருக்கு 1979-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவருக்கு பிரபாத் என்னும் சகோதரரும், பிரகதி என்னும் சகோதரியும் உள்ளனர். 

    இவர் ஆந்திரா மாநிலத்திலையே தனது கல்வியினை முடித்து தன தந்தையின் உதவியின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

    திரையுலக தொடக்கம்

    பிரபாஸ் 2002-ஆம் ஆண்டு ஈஸ்வர் என்னும் திரைப்படத்தில் நாயகனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் 2004-ஆம் ஆண்டு வர்ஷம் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதினை பிலிம்பார் விருது வழங்கியுள்ளது.

    இத்திரைப்படத்திற்கு பின்னர் 2005-ஆம் ஆண்டு சத்ராபதி திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று இவரை தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய திரையுலக நட்சத்திரமாக பிரபலமானார்.

    பிரபலம்

    தெலுங்கு திரையுலகில் மட்டும் பிரபலமாக முன்னணி நடிகராக வலம்வந்த இவர், 2015-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படமானது இந்திய அளவில் பிரபலமானதை தொடர்நது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் இந்தியாவில் முக்கிய நட்சத்திரமாக பிரபலமாகியுள்ளார்.