twitter
    Celebs»Prithviraj»Biography

    பிருத்திவிராஜ் பயோடேட்டா

    பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு இந்தியா நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு நந்தனம் என்ற மலையாளம் மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 மேல் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

    இவரின் தனிப்பட்ட வாழ்க்கை

    பிரித்விராஜ் அக்டோபர் 16, 1982ம் ஆண்டு திருவனந்தபுரம், கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர் மற்றும் தாயார் மல்லிகா சுகுமாரன் இவரும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம் மட்டும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

    பிரித்விராஜ் ஏப்ரல் 25, 2011ம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    திரையுலக தொடக்கம்

    இவர் 2002ம் ஆண்டு தனது 19வது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கு மேல் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    தமிழில் அறிமுகம்

    2005ம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2007ம் ஆண்டு பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, 2008-ம் ஆண்டு வெள்ளித்திரை 2009-ம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்துக்கொண்டுள்ளார்.

    2010ம் ஆண்டு போலிஸ் போலிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்த திரைப்படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடபடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

    2012ம் ஆண்டு ஐய்யா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவுரங்கசீப் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்த்து அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

    அங்கீகாரம்

    இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகின்றார். இந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி, இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்து பல விருதுகளையும் வென்றார்.

    இவர் புதிய முகம், தாந்தோன்னி, போக்கிரி ராஜா, அன்வர், உருமி, ஹீரோ, செவன்த் டே போன்ற திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.

    இவர் 2006ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.