twitter
    Celebs»Radha Ravi»Biography

    ராதா ரவி பயோடேட்டா

    ராதாரவி தென்னிந்திய திரையுலக திரைப்பட நடிகரும், அதிமுக அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க செயலாளர் பதவில் இருந்துள்ளார். மேலும் 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
     
    ஜனனம் 
    ராதாரவி ஜூலை 30ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு எம்.ஆர்.ஆர்.வாசு என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா ஆவார்கள்.
     
    திரையுலக வாழ்கை 
    தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்துள்ளார். மேலும் வி. கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர்.வாசு, டி.கே.சந்திரன் மற்றும் யு.ஏ.ஏ போன்றவர்களின் நாடகங்களில் நடித்துள்ளார். 1980ல் தனியாக ஒரு நாடக கம்பேனியை தொடங்கினார். ரகசிய ராத்திரி எனும் கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார். கமலின் அறிமுகத்தினால் கே.பாலச்சந்தரின் மன்மதலீலை படத்தில் தோன்றினார். மன்மதலீலை படமே ராதாரவிக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது.

    டி. ராஜேந்தரரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். வைதேகி காத்திருந்தாள் , உயர்ந்த உள்ளம் , சின்னத் தம்பி , பூவெளி , உழைப்பாளி, குரு சிஷ்யன் என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். வீரன் வேலுத்தம்பி என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார்.

    ராதிகாவின் தயாரிப்பான செல்லமே எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருந்தார். மேலும் இவர் ஒரு மேடை பேச்சாளராகவும் திகழ்பவர்.
     
    சர்ச்சை பேச்சுக்கள்
    இவர் சமீப காலங்கட்டங்களில் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் திகழ்பவர் ஆவார். இவர் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை விமர்சித்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

    2019-ம் ஆண்டு மார்ச்-ல் கொலையுதிர்காலம் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகை நயன்தாராவை விமர்ச்சித்துள்ளர்.

    2018-ம் ஆண்டு #METOO விவகாரத்தில் இவரும் ஈடுப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர் எடுத்துரைத்த பதில்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    2018-ம் ஆண்டு சிம்பு வெளியிட்ட பெரியார் குத்து ஆல்பம் பாடலை குறித்து எழுந்த சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர் எடுத்துரைத்த பதில்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    2017-ம் ஆண்டு மார்ச்-ல் தி.மு.க பிரமுகர்களையும், ம.தி.மு.க வைகோ, பா.ம.க ராமதாஸ் உள்ளிட்டோரை விமர்ச்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.