twitter
    Celebs»Rajendran»Biography

    ராஜேந்திரன் பயோடேட்டா

    ராஜேந்திரன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் வில்லன், நகைச்சுவையாளர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் மொட்டை ராஜேந்திரன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் என்னும் புனைப்பெயர்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளார்.

    ராஜேந்திரன், ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா - விக்ரம் நடித்திருக்கும் "பிதாமகன்" திரைப்படத்தில் ஒரு ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் பல படங்களில் யாரும் கண்டறியப்படாத கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 500 க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். 

    திரையுலக அனுபவம்

    ராஜேந்திரன் சினிமாவில் நடிக்கும் விருப்பத்தோடு இளம்வயதில் சென்னைக்கு வந்த பல இளைஞர்களுள் ஐவரும் ஒருவர் ஆவார். தொடக்கத்தில் பல தடைகளையும், பல கஷ்டங்களையும் கடந்து வந்துள்ள இவர், ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்  (சண்டை பயிற்சியாளர்) மற்றும் சில முக்கிய நடிகர்களுக்கு டூப் செய்து நடிக்கும் வேலைகளில் பணியாற்றியுள்ளார்.

    சினிமாவில் பல போராட்டங்களுக்கு பின்னர் அமரன், திருமதி பழனிசாமி, ஜென்டில் மேன், லேசா லேசா போன்ற படங்களில் யாரும் குறிப்பிடப்படாத கதாபாத்திரங்களில் நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார்.

    2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தில் ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் ரசிகர்கள் குறிப்பிடப்படும் வேடத்தில் நடித்த இவர், பின்னர் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

    2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான "நான் கடவுள்" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இவர், அந்த ஆண்டின் சிறந்த வில்லன் நடிகருக்கான வரிசையில் பல விருதுகளை அள்ளியுள்ளார். இப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது.

    நான் கடவுள் படத்திற்கு பின்னர் ஒரு வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ள இவர். "பாஸ் என்கிற பாஸ்கரன்" திரைப்படத்திலிருந்து ஒரு நகைச்சுவையாளராக பிரபலமானார். தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் புயல் பெற்றுள்ளார்.

    பிரபலம்

    ஒரு சண்டை பயிற்சியாளர் மற்றும் தமிழ் சினிமா நடிகர்களுக்கு டுப் செய்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள ராஜேந்திரன், தற்போது மொட்டை ராஜேந்திரன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் என்னும் புனைபெயர்களில் ஒரு முக்கிய பிரபலமாக புகழ் பெற்றுள்ளார்.

    இவரது திரைப்பயணத்தில் நான் கடவுள் திரைப்படம் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது. பின் இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பேன்டா, தெறி ஆகிய படங்கள் இவரை ஒரு முக்கிய நடிகராக உயர்த்தியுள்ளது.

    2015 ஆம் ஆண்டு வெளியான "இவனுக்கு தண்ணில கண்டம்" என்ற திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இப்படத்தில் நடிகர் ராஜேந்திரன் கதாபாத்திரம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. ஒரு நகைச்சுயாளராகவும், வில்லனாகவும் இப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் இப்படத்திற்கு ஒரு அடையாளத்தினை பெற்று தந்துள்ளது.

    தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.