twitter
    Celebs»Rajinikanth»Biography

    ரஜினிகாந்த் பயோடேட்டா

    ரஜினிகாந்த், இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் பிரபலம் முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார். "சிவாஜி ராவ் கெய்க்வாட்" என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், ரஜினிகாந்த் என்னும் திரைப்பெயர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பணியாற்றியுள்ளார். இவருக்கு இந்திய ரசிகர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர்.

    இந்திய அரசின் உயர் விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல விருதுகளை வென்றுள்ள இவர், இந்தியாவின் முக்கிய பிரபலமாக அறியப்படுகிறார். ஸ்டைலான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு என ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து தமிழ் திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்னும் பட்டத்தினை பெற்றுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்துள்ளார். பின்னர் நாயகனாக நடிக்க வாய்ப்பினை பெற்று பல படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்பயணத்தில் சுமார் 175 திரைப்படங்களுக்கு மேல் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.

    பிறப்பு

    சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயரில் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12ல் பெங்களூரு மாநிலத்தின் முக்கிய நகரான மைசூர் நகரத்தில் உள்ள ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை ராமோஜி ராவ் கெய்க்வாட் காவலராக பணிபுரிந்தவர். இவருக்கு இரண்டு தமயன்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது தந்தை 1956-ஆம் ஆண்டு காவலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் உள்ள ஹனுமந்த நகரில் இடம் பெயர்ந்துள்ளனர். ரஜினியின் ஒன்பது வயதில் இவரது தாய் மரணமடைந்துள்ளார்.

    கர்நாடகாவில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் தனது கல்வியினை பயின்ற இவர், கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். படிக்கும் காலத்தில் இந்த விளையாட்டுகளில் பங்களித்து பல பரிசுகளை வென்றுள்ளார் ரஜினி. அவர் பெங்களூர் பசவனகுடியில் ஆச்சார்யா பாத்ஷாலா செய்து விவேகானந்தா பாலகா சங்கத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

    தனது அண்ணனின் அறிவுரைப்படி "ராமகிருஷ்ணா மத்" என்னும் அமைப்பில் இணைந்த இவர், வேதங்கள் மற்றும் சன்ஸ்க்ரிட் ஆகிய மொழிகளை கற்றறிந்தார். இந்தியாவின் புகழ் பெற்ற காவியமான "மஹாபாரதம்" காவியத்தில் உள்ள ஏகலைவன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை வென்றுள்ள ரஜினி.

    திரையுலக அறிமுகம்

    ரஜினிகாந்த் பெங்களூரில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தார். திரையுலகில் தனது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு மேடை நாடகங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் தனது வீட்டின் அருகே  ராமர் அனுமன் கோவிலில் சண்டை பயிற்சி செய்வார். தனது பள்ளி படிப்பினை முடித்தபின் ஒரு கூலி தொழிலாளியாகவும் பின் பல துறைகளில் பல்வேறு பணிகளில் வேலை செய்து ரஜினி, இறுதியில் பெங்களூரு பஸ் டிரான்ஸ்போர்ட் (BTS) நிறுவனத்தில் ஒரு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார்.

    இவரின் நடிப்பின் ஆர்வத்தை கண்டு ஆச்சிரியமான இவரின் தோழர் ராஜ் பகதூர், இவரை நடிப்பினை பற்றி பல விஷயங்களை கற்றுக்கொள்ள துண்டியுள்ளார். அதற்காக "மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்" என்னும் நிறுவனத்தில் சேர்ந்து படிக்க நினைக்கும் இவருக்கு இவரது குடும்பம் துணையாக இருக்கவில்லை. இவரின் நண்பர் "ராஜ் பகதூர்" இவருக்கு பணம் அளித்து பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

    அந்த நிறுவனத்தில் இவரின் நடிப்பினை கண்ட கே. பாலச்சந்தர் இவரை தமிழ் மொழியை கற்க வேண்டும் என அறிவித்துள்ளார். பின் இயக்குனர் கே. பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் 1975-ஆம் ஆண்டு இவரை ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
     
    திரையுலக அனுபவம்
     
    இயக்குனர் கே. பாலச்சந்தரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பிரபலமானது. நடிகை ஸ்ரீவித்யாவின் கணவராக நடித்த இவர், இப்படம் வெளியானதும் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. பல பத்திரிகைகளில் இவரை பற்றிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

    தொடர்ந்து துணை நடிகராக பல கதாபாத்திரம் மற்றும் வில்லனாக நடித்து வந்துள்ள இவர், "சிலக்கம்மா செப்பிந்தி" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமாகினார். இத்திரைப்படமே ஹீரோவாக இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும்.  இப்படத்திற்கு பின்னர் தமிழில் பல படங்களில் நடித்து வந்துள்ள இவர், இயக்குனர் பாலச்சந்தரின் "மூன்று முடிச்சு" திரைப்படம் இவரின் திரைவாழ்வில் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது.

    இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த முள்ளும் மலரும், அவள் அப்படிதான், பில்லா, அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகிய படங்கள் இவருக்கு சினிமாவில் ஒரு முக்கிய படங்களாக அமைந்துள்ளது.

    பிரபலம்

    தனது திரைப்பட தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், பின்னர் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஹீரோவாக இவர் நடித்த முள்ளும் மலரும், பில்லா, முரட்டு காளை, ஜானி, தில்லுமுல்லு, மூன்று முகம் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது.

    ஒவ்வொரு காலத்திலும் பல நடிகர்களுடன் போட்டியிட்டு வென்ற ரஜினி தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என்னும் பட்டத்தின் மூலம் ஜொலித்து கொண்டிருக்கிறார்.

    தென்னிந்திய தமிழ் சினிமாவை தொடர்ந்து ரஜினி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து பிரபலமாகியுள்ளார். ஹாலிவுட் திரைப்படத்திலும் நாயகனாக இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நடிகர்களுள் சினிமாவில்  நான்கு வெவ்வேறு வடிவங்களில் தோன்றிய  முதல் நடிகர் ரஜினிகாந்த்.  கருப்பு மற்றும் வெள்ளை, நிறம் , 3D மற்றும் மோஷன் கேப்சர் கலந்த ஒரே படம் கோச்சடையான்.

    திருமணம்

    ரஜினிகாந்ந், ஆந்திர மாவட்டம் திருப்பதில், பிப்ரவரி 26, 1981 அன்று லதா பார்த்தசாரதியை தன்னுடய 31 ம் வயதில்  திருமணம் செய்தார். அவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். லதா தற்போது ஆசிரமம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். 

    ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  நடிகர் தனுஷ் என்பவரை திருமணம்  செய்து கொண்டார். அவரது இரண்டாவது மகள், சவுந்தர்யா ரஜினிகாந்த்   திரையுலகில்  ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிராஃபிக் டிசைனராக உள்ளார்.