twitter

    ரகுல் பிரீத் சிங் பயோடேட்டா

    ரகுல் பிரீத் சிங் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு புகழ் பெற்ற வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2009-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு நடிகையாக அந்தஸ்தை பெற்று பிரபலமாகியுள்ளார்.


    பிறப்பு

    ரகுல் பிரீத் சிங் பிறப்பால் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராஜேந்தர் சிங் ஒரு ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். இவரது தாயின் பெயர் குல்விண்டெர் சிங். சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் தனது பள்ளி படிப்பு மற்றும் உயர்நிலை கல்வியை கற்றறிந்த இவர், பின்னர் டெல்லி ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். இவருக்கு அமன் ப்ரீத் சிங் என்ற சகோதரனும் உள்ளார். இவர் "ராம் ராஜ்ய" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானவர்.

    திரையுலக தொடக்கம்

    தனது கல்லூரி காலத்தில் ரகுல் பிரீத் சிங், நடிப்பின் மீதும் மாடலிங் துரையின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் இவருக்கு 2009-ஆம் ஆண்டு படிக்கும் காலத்திலையே "கில்லி" என்ற கன்னட திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தனது பாக்கெட் மனி தேவைக்காக இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய "7/ஜி ரெயின்போ காலனி" படத்தின் கன்னடா ரீமேக் ஆகும்.

    ரகுல் பிரீத் சிங் நடித்த கிள்ளி என்ற கன்னட திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த கதாபாத்திர நடிகை என பல விருதுகளை பெற்று தந்துள்ளது.

    தனது கல்லூரி படிப்பினை முடித்த ரகுல், 2011-ஆம் ஆண்டு கேரட்டும் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

    பிரபலம்

    கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து இந்திய சினிமாவில் அனைவராலும் கண்டறியப்படும் ஒரு முக்கிய பிரபலமாக புகழ் பெற்றுள்ள ரகுல் பிரீத் சிங், திரைப்படங்களை தொடர்ந்து வடிவழகியாக பல போட்டிகளில் பங்குபெற்று பலமுறை பல்வேறு பட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

    ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமாவில் நடித்த தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, என்.ஜி.கே, ஸ்பைடர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் பெற்று பிரபலமாகியுள்ளது.