twitter
    Celebs»S.S.Rajamouli»Biography

    எஸ் எஸ் ராஜமௌலி பயோடேட்டா

    இராஜமௌலி (எஸ். எஸ். இராஜமௌலி) என்று அழைக்கப்படுகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கருநாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1965ல் பிறந்தார்.

    இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

    நான் ஈ என்ற படம் இவர் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும்.

    இவரின் அனைத்து படங்களுக்கும் இசை மரகதமணி, படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள்.