twitter
    Celebs»Sada»Biography

    சதா பயோடேட்டா

    சதா தென்னிந்தியத் திரைப்பட பிரபல நடிகை ஆவார். தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியுள்ள இவர், தமிழில் ஜெயம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இத்திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி திரைப்படமாக புகழ் பெற்றதை தொடர்ந்து இவர் தமிழில் பிரபலமானார்.



    பிறப்பு / திரையுலக தொடக்கம்

    சதா  மகாராஷ்டிராவில், ரத்னகிரி என்ற ஊரில், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஒரு வங்கி நிர்வாகியாக பணியாற்றியவர். அவர் ரத்னகிரியில்  புனித ஹார்ட்ஸ் கான்வெண்ட் ஹைஸ்கூலில் பயின்றார். பின்னர் அவர் அங்கிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தார்.

    மும்பையில் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ள இவர், சில திரை நட்சத்திரங்களின் அறிமுகத்தால் தெலுங்கில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள இயக்குனர் தேஜாவின் "ஜெயம்" திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படம் மிக பெரிய வெற்றி திரைப்படமாக புகழ் பெற்றது, பின்னர் இப்படத்தில் நடித்தற்காக இவர் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்று புகழ் திரைத்துறையால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

    திரையுலக அனுபவம் / பிரபலம்

    தெலுங்கில் "ஜெயம்" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நாக, பிராணம் போன்ற படங்களில் நடித்து வந்துள்ள இவர், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் நாயகியாக நீடித்து தமிழ் அறிமுகமாகியுள்ளார். இப்படமானது யாரும் எதிர்பாராத அளவிற்கு மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகினாலும், சில திரைப்படங்களில் மிக பெரிய புகழினை பெற்று பிரபலமான இவர், பின்னர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

    தமிழில் இவர் நடித்த அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள திரைப்படமாகும்.

    தொலைக்காட்சி அனுபவம்

    சதா திரைப்படங்களில் ஒரு அழகான கதாபாத்திரங்கள் வாயிலாக ரசிகர்களை தனது அழகு மற்றும் நடிப்பின் மூலம் கவர்ந்துள்ள இவர், தொலைக்காட்சிகளில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் நடிவராகவும் பணியாற்றியுள்ளார். 
     
    தமிழில் பிரபல தொலைக்காட்சியான "ஸ்டார் விஜய்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஜோடி நம்பர் ஒன்" நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்களித்துள்ளார்.