twitter

    சம்யுக்தா கார்த்திக் பயோடேட்டா

    சம்யுக்தா கார்த்திக் (சம்யுக்தா சண்முகநாதன்), 2017-ஆம் ஆண்டு "மிஸ் சென்னை" பட்டம் வென்றுள்ள ஒரு மாடல் ஆவார். இவர் மாடலிங் துறையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திட்டத்தில் நடித்துள்ள இவர், தமிழில் சந்திரகுமாரி நாடக தொடரில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடக தொடர்களிலும் நடித்து திரைத்துறையில் பணியாற்றியுள்ள இவர், இதனை தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்வில் பிரபல தொழிலதிபர் ஆவார். சம்யுக்தா கார்த்திக் 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரில் ஒரு போட்டியாளராக பங்கேற்று, தமிழ் திரைத்துறையில் தனது அடையாளத்தினை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றுள்ளார்.

    2017-ஆம் ஆண்டு நடந்த தமிழக அழகி போட்டியில் பங்கேற்று "மிஸ் சென்னை" பட்டம் வென்ற சம்யுக்தா கார்த்திக், பின் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா முன்னணி நடிப்பில் உருவாகி ஒளிபரப்பப்பட்ட "சந்திரகுமாரி" என்ற தொலைக்காட்சி தொடரில், ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரமான "ருத்ரா" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தொலைக்காட்சியில் தொடரில் நடித்து பிரபலமான சம்யுக்தா, 2019-ஆம் ஆண்டு "Oolu" என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

    பிக் பாஸ்

    2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ள சம்யுக்தா கார்த்திக், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.