twitter
    Celebs»Silambarasan»Biography

    சிலம்பரசன் பயோடேட்டா

    சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்) குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.

    சிலம்பரசன் என்னும் இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர் என்ற புனைப்பெயர்களில் ரசிகர்களிடம் பிரபலமான இவர், தமிழில் ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

    பிறப்பு

    சிலம்பரசன், தமிழ் திரைப்பட பிரபல நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரன் மற்றும் உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு மூத்த மகனாக 1983 பிப்ரவரி 3ல் பிறந்துள்ளார். இவர் தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொங்கறப்பள்ளி என்னும் ஊரை சேர்ந்தவர்.

    சிலம்பரசனுக்கு குறளரசன் என்னும் தமயனும், இலக்கியா என்ற சகோதிரியும் உள்ளனர். இவர் சென்னை எங்மோரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மற்றும் உயர்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பினை முடித்துள்ள இவர், பின்னர் கன்னட நாட்டில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.

    இவரின் சிறுவயதில் தனது தந்தை இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், பின்னர் தனது பட்ட படிப்பினை முடித்துவிட்டு 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கியுள்ளார் சிலம்பரசன்.



    ஒரு திரைக்குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக சிலம்பரசனின் தந்தை இயக்கிய பல படங்களில் நடித்து நடிப்பினை பற்றி கற்றறிந்த இவர், தனது படிப்பினை முடித்து நாயகனாக நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

    1984-ம் ஆண்டு "உறவு காத்த கிளி" திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி என 1980களில் வெளியான பல பிரபலமான படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார் சிலம்பரசன் என்கிற சிம்பு.

    சிலம்பரசன் நாயகனாக 2002ம் ஆண்டு "காதல் அழிவதில்லை" படத்தில் நடித்து ஒரு முக்கிய முன்னணி கதாபாத்திர நடிகனாக பிரபலமானார். இப்படத்தினை இவரின் தந்தை டி ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் தம் (2003), அலை (2003) என ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2004ம் ஆண்டு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான "கோவில்" படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானர்.

    2004ம் ஆண்டு இவர் நடித்த கோவில் படத்தினை தொடர்ந்து தமிழில் இவர் நடித்த குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 2006ம் ஆண்டு தமிழில் "வல்லவன்" திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார் சிலம்பரசன். இந்த வெற்றி படங்களின் தொடர்ச்சியில் இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகராக அனைவராலும் புகழப்பட்டார்.

    பிரபலம்

    ஒரு திரையுலக பிரபலத்தின் மகனாக தமிழில் அறிமுகமாகினாலும் தனது சுயமுயற்சி மற்றும் திறமைகளை கொண்டு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று பிரபலமாகியுள்ளார் சிலம்பரசன்.

    இவர் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனர் என தமிழ் திரையில் பிரபலமாக பணியாற்றி வந்துள்ள இவர், இசையமைப்பாளராக 2017ம் ஆண்டு சந்தானம் நடித்த "சக்க போடு போடு ராஜா"  திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.பிரபலமாகியுள்ளார்.

    பல திரைப்பட பாடல்களுக்கு பாடலாசிரியாக பல பாடல்களை எழுதியுள்ளார். பின்னர் "லவ் ஆன்தம்" என்ற ஒரு ஆங்கில பாடலை பாடி உலகளவில் பிரபலமானார் சிம்பு.

    நடிகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பாடலாசிரியராக 2006ம் ஆண்டு "லூசு பெண்ணே" பாடலை எழுதி பாடியுள்ளார் சிம்பு. பின்னர் "காள காள", "எவண்டி உன்ன பெத்த", "வேர் இஸ் தி பார்ட்டி", "பொண்டாட்டி", "லவ் பண்ணலாமா வேணாமா" என பல பிரபலமான பாடல்களை எழுதி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார் சிம்பு.

    அங்கீகாரம்
     
    • 2006ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெருவப்படுத்தியுள்ளது.

    • சர்வதேச தமிழ் நாடு திரைப்பட விருதுகளான சீமா விருது இவருக்கு 2012ம் ஆண்டின் "ஸ்டைலிஷ் ஸ்டார் ஆப் சவுத் சினிமா" என்ற விருது வழங்கியுள்ளது.

    • ஐடிஃப்எ குழு சார்பில் சிறந்த நடிகருக்கான விருதினை வானம் படத்திற்காக 2011ம் ஆண்டு பெற்றுள்ளார்.

    • விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை எடிசன் விருது அமைப்பு குழு இவருக்கு 2010ம் ஆண்டு வழங்கியுள்ளது.

    • 2009ம் ஆண்டு சிலம்பாட்டம் படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருதும், சிறந்த நடனக் கலைஞருக்கான விருதையும் இசையருவி தமிழ் மியூசிக் விருதுகள் இவருக்கு வழங்கியுள்ளது.

    • 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை எடிசன் விருது அமைப்பு குழு இவருக்கு வழங்கியுள்ளது.