Celebs » Siva Karthikeyan » Biography
பயோடேட்டா
சிவ கார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவரும் தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி, பிப்ரவரி 3, 2012 அன்று வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாக தனது திரை உலக வாழ்வை துவங்கினார்.

பின்பு இவர் மனம் கொத்தி பறவை,  வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற படங்களில் நடித்தார். தற்போது காக்கிச்சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்களுக்கு பிறகு, சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் ரெமோ படத்தில் நடித்தார். அத்திரைப்படம் விமர்சனங்களுக்கு மத்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.