twitter
    Celebs»Soori»Biography

    சூரி பயோடேட்டா

    சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். ஆனால் இவர் 1999-ம் ஆண்டு முதலே  நடிக்க தொடங்கி தற்போது 60-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துவருகிறார்.

    திரையுலக தொடக்கம்

    இவர் 1999-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார், இவர் நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் பணியாற்றியுள்ளார்.

    இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புசுபாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஒரு சில கதாபாத்திரங்களில் யாரும் கவனிக்க படாத கதாபாத்திரத்தில் நடித்துவந்துள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னரே இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் ஒரு சில நேரங்களிலேயே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த இவர், இவருக்கென குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் 2005-ஆம் ஆண்டு ஜி திரைப்படத்திலிருந்து நடிக்க தொடங்கியுள்ளார்.


    பிரபலம்

    இவர் பல திரைப்படங்களில் குறிப்பிடப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், 2009-ஆம் ஆண்டு வென்னிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திரமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அத்திரைப்படத்திலிருந்து இவர் களவாணி, தூங்கா நகரம், குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், முன்னணி நகைச்சுவை நடிகராக சித்தரிக்கப்பட்டார்.

    அங்கீகாரம்

    இவர் பல திரைப்படங்களில் பல கதாபாத்திரத்திரங்கள் ஏற்று நடித்து பின்னரே நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அங்கீகரிக்கப்பட்டார். இவரின் முதல் திரையுலக விருதினை 2013-ஆம்  ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்காக மலேசியாவில் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது நிகழ்ச்சியில் இவர் இவரின் முதல் விருதினை பெற்றுள்ளார். 

    இவர்க்கு இந்திய அரசு 2019-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.