twitter
    Celebs»Sri Divya»Biography

    ஸ்ரீ திவ்யா பயோடேட்டா

    ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபல நடிகை. இவர் சிறுவயதில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களை கவர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

    பிறப்பு

    ஸ்ரீதிவ்யா, தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான 'ஸ்ரீ ரம்யா' என்பவரின் சகோதரி ஆவார். தனது சிறுவயதில் இருந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரையில் பல அனுபவங்களை பெற்று பிரபலமானவர்.

    ஸ்ரீதிவ்யா புகைப்படங்கள்

    ஸ்ரீதிவ்யா நடித்த தமிழ் படங்கள்

    திரையுலக அனுபவம்


    ஸ்ரீதிவ்யா 2000-ம் ஆண்டு 'ஹனுமான் ஜங்ஷன்' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் வீட, யுவராஜு என ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு திரைப்படங்களில் புகழ் பெற்றார்.

    தனது 3 வயதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்றார்.

    ஸ்ரீதிவ்யா 2010ம் ஆண்டு 'மனசார' என்ற காதல் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது. பின்னர் 2012-ம் ஆண்டு 'பஸ்ஸ்டாப்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. பின்னர் தெலுங்கு திரையில் ஒரு குறிப்பிடப்படும் இளம் நாயகியாக பிரபலமானார்.

    2013-ம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவா கார்த்திகேயன் நடித்த நகைச்சுவை படமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நாயகையாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து பிரபலமானது. இப்படத்தின் வெற்றியின் காரணமாக இவர் பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

    தமிழ் திரைத்துறையில் இவர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தினை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழில் காக்கி சட்டை, ஜீவா, வெள்ளக்கார துறை, ஈட்டி என பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.