twitter
    Celebs»Sridevi Kapoor»Biography

    ஸ்ரீதேவி கபூர் பயோடேட்டா

    ஸ்ரீ தேவி தமிழ் நாட்டில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இந்திய திரைத்துறையில் பிரபலமானவர்.

    பிறப்பு / குடும்பம்

    ஸ்ரீதேவி அய்யப்பன் - இராஜேஸ்வரி என்னும் தம்பதியருக்கு  13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி-யில், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவரின் தங்கையின் கணவர்  சஞ்சய் ராமசாமி 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    1996-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ல் ஸ்ரீதேவி-க்கும் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது, இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

    பிரபலம் / திரையுலக தொடக்கம்

    தமிழ் நாட்டை பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 1969-ஆம் ஆண்டு துணைவன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இவர் தமிழ் கடவுள் முருகன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

    பின்னர் இவர் இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான முயன்று முடுச்சு திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இருந்து தமிழ் திரையுலகில் பிரபலமாக அறியப்பட்ட நாயகியாக திகழ்ந்தார்.

    இவர் இந்திய திரைத்துறையில் தமிழ் திரையுலகின் மூலம் அறிமுகமாகி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் இந்தியாவில் அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக பல விருதுகளை வென்றுள்ளார்.

    மேலும் : இவரின் பிரபல திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு
     
    அங்கீகாரம்

    இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் மம் 300வது படமாகும்.

    கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

    மெழுகு சிலை

    அண்மையில் 2018-ஆம் ஆண்டு துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி-க்கு அவரின் குடும்பத்தினர் போனி கபூர், ஜான்வி கபூர், மற்றும் குஷி கபூர் ஆகியோர் இவருக்கு ஒரு மெழுகு சிலையினை திறந்து வைத்துள்ளனர். இவரது நினைவு நாளை முன்னிட்டு இவருக்கு இந்த சிலையை திறந்துவைத்துள்ளனர்.