twitter
    Celebs»T Rajendar»Biography

    டி ராஜேந்தர் பயோடேட்டா

    டி.ராஜேந்தர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார்.

    இவர் தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டு ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் எழுத்தாளராகவும், இசையமைப்பாளராகவும் அதோடு கௌரவ தோற்றத்தில் இப்படத்தில் நடித்து, திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்திற்கு பின்னர் வசந்த அழைப்புகள் என்ற படத்தினை இயக்கி இயக்குனராகவும் பணியை தொடங்கியுள்ளார்.

    டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் பெயரினை தற்போது விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

    ராஜேந்தர் சமீபத்தில் குரல் தொலைக்காட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார், பின்னர் ஒரு சில பிரச்னையால் அதனை நிறுத்திவிட்டார், பின்னர் சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற ஒரு திரைப்பட விநியோகஸ்தர் நிறுவனத்தை அமைத்து இயக்கிவருகிறார். இந்நிறுவனமானது 2011-ம் ஆண்டு தொடங்கி சென்னை மற்றும் மதுரை சார்ந்த திரையரங்குகளுக்கு விநியோகம் செய்கிறது.

    அரசியல் வாழ்க்கை
    திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.