twitter
    Celebs»Trisha Krishnan»Biography

    திரிஷா கிருஷ்ணன் பயோடேட்டா

    திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். இந்த பட்டத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக உள்ளார்.


    பிறப்பு / திரையுலக அறிமுகம்

    திரிஷா பிறப்பால் ஒரு பாலக்காடு ஐயர் குடும்பத்தை சார்ந்தவர். இவரது பெற்றோர் கிருஷ்னன் மற்றும் உமா ஆவார். திரிஷா சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தனது படிப்பினை முடித்த இவர், தனது கல்லூரி படிப்பினை முடித்து மாடெல்லிங் துறையில் ஈடுபாடு கொண்டு கால்பதித்துள்ளார். பல போராட்டங்களுக்கு பின்னர் இவர் ஒரு சில விளம்பரங்களில் நடிக்க தொடங்கியுள்ள திரிஷா, 1999-ஆம் ஆண்டு "மிஸ் சேலம்" கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதே ஆண்டு சென்னையில் நடந்த மாபெரும் அழகு போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்று 1999-ம் ஆண்டின் "மிஸ் சென்னை" பட்டத்தினை வென்று புகழ் பெற்றார்.

    1999-ஆம் ஆண்டு "மிஸ் மெட்ராஸ்" பட்டத்தினை வென்று பிரபலமான இவர், 2001-ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற "மிஸ் இந்திய" போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்திய அளவில் பிரபலமான இவர், பின்னர் திரைத்துறையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.

    திரிஷா கல்லூரி படிக்கும் காலத்திலையே மிகவும் நெருக்கடியான நேரங்களில் திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், கல்லூரியின் தினசரி வருகை குறைபாட்டால் கோடை விடுமுறையில் தனது பாடங்களை கற்று தனது பட்டத்தினை வென்றுள்ளார்.

    மிஸ் இந்திய போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ள இவர், 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் லேசா லேசா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்து இவர் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.



    திரைப்பட தொடக்க / பிரபலம்

    "மிஸ் இந்தியா" மற்றும் "மிஸ்.மெட்ராஸ்" போன்ற அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ள திரிஷா, 1999-ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    ஒரு துணை நடிகராக இருந்த திரிஷா, இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான "லேசா லேசா" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ஒரு முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.

    திரிஷா, தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார். இவர் சரளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் பேசும் வல்லமை பெற்றதால் எளிதாக தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.