twitter
    Celebs»Vignesh Shivan»Biography

    விக்னேஷ் சிவன் பயோடேட்டா

    விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகன் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றிவருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சிலம்பரசன், தனுஷ், அனிருத் ஆகியவருடன் இணைந்து ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார்.

    விக்னேஷ் சிவன் ஏனைய குறும்படங்களுக்கு பின்னர் 2012-ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் போடா போடி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகராக 2007-ம் ஆண்டு வெளிவந்த சிவி என்னும் திகில் திரைப்படத்தில் சொல்லப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமான இவர், 2014-ம் ஆண்டு தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்து திரையில் பிரபலமானார்.

    இத்திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் முன்னணி இயக்குனராக சித்தரிக்கப்பட்டார்.

    2015-ம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததுக்கு விக்னேஷ் சிவன், 2022 - ஜூன் 09ல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரவை திருமணம் செய்து கொண்டார்.