twitter
    Celebs»Vikram»Biography

    விக்ரம் பயோடேட்டா

    விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.

    விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது. அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்து திரை விமர்சகளிடமிருந்து நன்மதிப்பை பெற்றார்.

    விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவணம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.