CelebsbredcrumbVinoth HbredcrumbBiography

    ஹச் வினோத் பயோடேட்டா

    ஹச் வினோத் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2014-ம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் திரைத்துறையில் இயக்குனர் விஜய் மில்டன் இடம் உதவி இயக்குனராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

    பிரபலம்

    இயக்குனர் விஜய் மில்டனின் உதவி இயக்குனரான இவர், 2014-ம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்நது இவர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இந்த இரு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இவர் திரையுலகில் நட்சத்திர இயக்குனராக அறியப்பட்டார்.