twitter
    Celebs»Vishal Krishna»Biography

    விஷால் கிருஷ்ணா பயோடேட்டா

    விஷால் (விஷால் கிருஷ்ணா ரெட்டி) இந்திய தமிழ் திரையுலக நடிகர், தயாரிப்பாளர், மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க உறுப்பினர் என அணைத்து திரையுலக சார்ந்த  அமைப்புகளிலும் மற்றும் தமிழக அரசியலிலும் முக்கிய பங்களித்து வருபவர்.

    பிறப்பு

    விஷால் முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி. கே. ரெட்டி என்பவரின் மகன் ஆவார்.  இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவருக்கு விக்ரம் கிருஷ்ணா என்னும் தமயனும், ஐஸ்வர்யா என்னும் தங்கையும் உள்ளனர்.

    திரையுலக தொடக்கம்

    விஷால் தனது கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கு இவரின் குடும்பத்தினரின்  ஆலோசனை பேரில், நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

    விஷால் நடிகர் அர்ஜுன்-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் பொழுது செல்லமே திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இவர் செல்லமே திரைப்படத்தில் நடிப்பதற்காக கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பினை கற்றுள்ளார். அதன் பின்னர் செல்லமே திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

    செல்லமே திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சண்டக்கோழி, திமிரு ஆகிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி இவருக்கு வெற்றிகளை அள்ளித்தந்தன. இத்திரைப்படைகளின் வெற்றிக்கு பின்னர் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பிரபலமானார்.



    பிரபலம்

    இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி முதல் மூன்று திரைப்படங்களிலையே ரசிகர்களின் ஆதரவை பெற்று பிரபலமாகியுள்ளார். பின்னர் இவர் தமிழ்நாடு நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர் பதவிக்கு 2017-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

    அரசியல்

    இவர் தமிழக முதல் ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதன் மூலம் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவார்களா? என்று எதிர்பாத்துக்கொண்டிருந்த நிலையில் இவர் தீடிரென அரசியலுக்கு வருகை தந்து ஒரு தொகுதியில் போட்டியிட்டது அனைவர்க்கும் மிக ஆச்சிரியமாக இருந்தது.

    தொலைக்காட்சி அறிமுகம்

    இவர் 2018-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அந்த நிகழ்ச்சியை வழிவகுத்துள்ளார்.