Celebs » Vishnu » Biography
பயோடேட்டா
விஷ்ணு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
   
விஷ்ணு விஷால், தமிழ்நாடு போலீஸ் ADGP ரமேஷ் குடவ்லா-விற்கு மகனாக பிறந்தார். அவர் எம்.பி.ஏ முடித்தப் பிறகு,  TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது ஒரு காலில் காயம்  ஏற்ப்பட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவர் படுக்கையிலேயே இருந்த காலத்தில், படங்களை பார்க்கத் தொடங்கியனார். பிறகு,  அவருக்கு நடிக்க  ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. அவரது தந்தை, மாமா பல சிறிய படங்களில் ஒரு நடிகராக  இருந்ததாலும், அவருக்கு படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த  வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் விஷ்ணு  தற்போது ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை  போன்ற 10 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.