Captain Miller: “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்..” மிரட்டும் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில் ப்ரீயட் படமாக உருவாகியுள்ளது.

கேப்டன் மில்லரில் இருந்து ஏற்கனவே டீசர் வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

இதுபற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ள அப்டேட், தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

 Captain Miller: GV Prakash has given an update on Captain Miller first single

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்: தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பு வெறித்தனமாக இருக்குமாம். ராக்கி, சாணிக் காயிதம் படங்களில் மிரட்டலான மேக்கிங் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லரையும் அசுரத்தனமாக இயக்கியுள்ளார்.

தனுஷுக்காகவே கேப்டன் மில்லர் படத்தில் செம்ம மாஸ் சீன்களை வைத்துள்ளாராம் அருண் மாதேஸ்வரன். தனுஷ் பிறந்தநாளில் வெளியான கேப்டன் மில்லர் டீசரே இதற்கு சாட்சி என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் ட்ரெய்லரில் இன்னும் தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என தனுஷுக்கு தனது BGM மூலம் மாஸ் கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். அவர்தான் கேப்டன் மில்லர் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் BGM வெறித்தனமாக இருக்கும் என ஏற்கனவே ஜிவி பிரகாஷ் கூறியிருந்தார். இதனால், தனுஷ் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. தற்போது அதனை இன்னும் எகிற வைக்கும் அளவில், கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்துள்ளார்.

 Captain Miller: GV Prakash has given an update on Captain Miller first single

இதுபற்றி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்... நீ படையா வந்தா சவ மழ குவியும்... Killer killer captain millerrrrrrrrr... Audio preparations onway..." என ஹைப் கொடுத்துள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த டிவிட்டர் பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என கேட்டு வருகின்றனர். கேபர் வாசுகி எழுதியுள்ள கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் கேப்டன் மில்லர் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமெடுத்துள்ளதாம். தனுஷ் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துவிட்டதாகவும், அவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் டப்பிங் கொடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X