அண்ணா.. அண்ணா பயமா இருக்குண்ணா.. திடீரென பயந்து கதறிய இந்திரஜா சங்கர்.. டைட்டானிக் போஸ் வேற!

சென்னை: ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கருக்கும் ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பி கார்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் நடனமாடி ஆட்டம் போட்டு அசத்தியது எல்லாம் இல்லாமல் அக்காவான பிரியங்காவுக்கே லிப் கிஸ் முத்தம் எல்லாம் கார்த்திக் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது.

சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுக்கே லிப் கிஸ் முத்தமெல்லாம் கொடுத்து வருகின்றனர். அதிகமான அன்பை செலுத்தும் நபர்களுக்கு "முத்தம் காமத்தில் இருந்து பிறந்தது இல்லை" என கிஸ் செய்வது பிரியங்கா போல டைட் ஹக் செய்வது என பிரபலங்கள் மாறி வருகின்றனர்.

Indraja Shankar afraid at boat photoshoot gets trolled

சென்னை மேட்டுப்பாக்கத்தில் உள்ள SPP கார்டன்ஸ் எனும் இடத்தில் தான் ரோபோ சங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே இடத்தில் உள்ள நீர்நிலையில், படகில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் இந்திரஜா சங்கர் கத்தி கூச்சல் போட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

3 மடங்கு கூட்டம்: 3000 பேருக்குத்தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தேன். ஆனால், திடீரென 9000 பேர் ரிசப்ஷனுக்கு வந்துட்டாங்க. இந்த அளவுக்கு கூட்டம் வரும்னு கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல என ரோபோ சங்கர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் நன்றி கூறும்போது எஸ்பிபி கார்டனில் மைக்கை பிடித்து பேசினார்.

மயக்கம் போட்ட இந்திரஜா: ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கரின் திருமண விழா வீடியோக்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. அதிகமான கூட்டம் ஸ்டேஜில் ஏறிய நிலையில், திருமண வரவேற்பு ஸ்டேஜ் 2 முறை உடைஞ்சிடுச்சு என கார்த்திக் கூறினார். மேலும், இந்திரஜா கூட்ட நெரிசல் காரணமாக சரியான காற்றுக்கூட இல்லாத நிலையில், 2 முறை மயக்கம் போட்டு விழுந்ததும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

படகு ஷூட் பயங்கரம்: ரிசப்ஷன் உடையில், அங்கிருந்த படகில் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் இருவரும் டைட்டானிக் போஸெல்லாம் கொடுத்து போட்டோஷூட் நடத்த திட்டமிட்டனர். அந்த படகில் ஏறியதில் இருந்தே அய்யோ காப்பாத்துங்க அம்மா காப்பாத்துங்க.. அண்ணா அண்ணா பயமா இருக்கு அண்ணா என பயந்துக் கொண்டே இந்திரஜா இருந்தார்.

கலாய்த்த ரசிகர்கள்: சர்வைவர் நிகழ்ச்சிக்கு எல்லாம் இவர் எப்படி தான் போட்டியாளராக சென்றாரோ, இப்படி சாதாரண படகில் ஏறியதற்கே இப்படி சீன் போடுகிறாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அங்கே அத்தனை பேர் இருக்கும் போதே இந்த கதறு கதறுவதெல்லாம் போட்டோஷூட்டுக்காக இல்லை வீடியோ ரீல்ஸ்க்காக என ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X