ஜோதிகாவின் அக்கா நக்மா இல்ல..48 வயதில் அவருக்கு வந்த ஆசை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்!

சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நக்மா.48 வயதாகும் நக்மா தனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ள வீடியோவில், பாட்டி வயதாகிவிட்ட நக்மாவிற்கு இப்போது திருமண ஆசை வந்து இருக்கு என்று பேசி உள்ளார்.

மும்பை மாடல் அழகிகளின் வரவு தமிழ் சினிமாவில் அதிகரித்து இருந்த காலகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி ஆனவர் தான் நடிகை நக்மா. இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

Nagma Jyothika Bayilvan Ranganathan

முதல் படத்தின் வெற்றியால் புகழின் உச்சிக்கு சென்ற நக்மா,தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.தமிழில் 12 படங்களில் நடித்த நக்மா, நடிகர் அஜித்துடன் சேர்ந்து, தீனா மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். சிட்டிசன் திரைப்படம் தான் தமிழில் நக்மா நடித்த கடைசி படமாகும். அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவே இல்லை.

திருமண ஆசை: அண்மையில் நக்மா தனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறி இருந்தார். இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நடிகை நக்மாவிற்கு 48வயதில் திருமண ஆசை வந்துள்ளது. இதைத்தான் நம் பெரியவர்கள் பருவத்தில் பயிர் செய் என்றார்கள். அரசாங்கமே பெண்களுக்கு 21 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், திருமணம் செய்ய வேண்டிய வயசை எல்லாம் விட்டுவிட்டு இப்போது அவருக்கு திருமண ஆசை வந்து இருக்கு என்றார்.

கிசுகிசுவில் சிக்கினார்: நடிகை நக்மா ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாருடன் பாட்சா படத்தில் நடித்தார். இந்த படத்தைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அப்போது நடிகர் சரத்குமாருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்ததாகவும், கிரிக்கெட் வீரர் கங்குலி, போஜ்பூரி நடிகர் என பல நடிகர்களுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து கிறிஸ்துவ மத போதகராக வலம் வந்த நக்மா தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.

Nagma Jyothika Bayilvan Ranganathan

48வயது கிழவி: இப்படி சினிமா அரசியல் என வலம் வந்த நக்மாவிற்கு இப்போது 48 வயதாகிறது. இவரது சகோதரிகளான ஜோதிகா, ரோஷினி இருவருமே திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டிலாகி விட்டார்கள். ஆனால் பாட்டி வயதாகிவிட்ட நக்மாவிற்கு இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. 48 வயது கிழவியை திருமணம் செய்து கொள்ள தொழிலதிபர்கள் யாரும் முன்வர மாட்டார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் அனைவரும் நக்மா ஜோதிகாவின் சொந்த அக்கா என்று கூறுகிறார்கள். உண்மையில் அவர் உடன் பிறந்த சகோதரி இல்லை, அவர் பெரியம்மாவின் மகள். ஜோதிகாவின் சொந்த சகோதரி ரோஷினி தான் அவர் அருண்விஜய்யுடன் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கும் திருமணமாகிவிட்டது என பயில்வான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X