Rudhran Public Review : ருத்ரன் காஞ்சனா படத்தின் காப்பியா? பொதுமக்கள் சொல்வது என்ன?

சென்னை : பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பலர் நடித்துள்ளனர்.

காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து லாரன்சை திரையில் பார்த்த ரசிகர்கள் ருத்ரன் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

Raghava Lawrences Rudhran public review tamil

ருத்ரன் : தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ருத்ரன் பாடத்தில் ராகவா லாரன் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் லாரன்ஸின் மனைவியாகவும், பூர்ணிமா பாக்யராஜ் அம்மாகவும், நாசர் அப்பாகவும் நடித்துள்ளனர். சரத்குமார் அதிரடியான வில்லனாக நடித்துள்ளார்.

படத்தின் கதை : லாரன்ஸின் அப்பா நாசர் நண்பனுக்கு கடன் வாங்கி தருகிறார். நண்பன் ஏமாற்றியதால் கடனாளியான நாசர் ஏமாற்றத்தால் மனவேதனை அடைந்து உயிரிழந்துவிட கடனை அடைக்கும் பொறுப்பு லாரன்ஸிடம் வருகிறது. இதனால், மனைவி, அம்மாவை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார் லாரன்ஸ்.

படத்தின் மீதிக்கதை : இந்த நேரத்தில் லாரன்ஸின் தாய் பூர்ணிமா இறந்துவிட, வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் லாரன்ஸிற்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதாவது மனைவி பிரியா பாவனி சங்கரை காணவில்லை. மனைவிக்கு என்ன நடந்தது, எங்கே போனார், அம்மாவின் இறப்பிற்கு காரணம் என்ன என்பது தான் ருத்ரன் திரைப்படத்தின் மீதிக்கதை.

அம்மா செண்டிமெண்ட் : இன்று ருத்ரன் படம் பார்த்த பொதுமக்கள், வழக்கமாக லாரன்ஸ் படத்தில் அம்மா செண்டிமெண்ட் அட்டகாசமாகவே இருக்கும் அதே போல இந்த படத்திலும் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி அதிரடியாக இருக்கு. ருத்ரன் படத்தின் மூலம் இயக்குநர் நல்ல ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இந்த படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

Raghava Lawrences Rudhran public review tamil

காஞ்சனா படத்தின் காப்பியா : ருத்ரன் படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு படம் காஞ்சனா படம் போல் இருக்கும் என்றும், காஞ்சனா படத்தின் காப்பி என்றும் கருத்து சோஷியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், படம் அந்த கதை போல இல்லை. படம் பழைய கதை போல இருந்தாலும்,டான்ஸ், சண்டை சிறப்பாக இருந்தது. வழக்கம் போல ஜிவி பிரகாஷ் மியூசிக்கில் அவரது பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். ஆக்ஷன், காதல், பாசம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் லாரன்ஸ் சிறப்பாக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X