Don't Miss!
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரவீந்தர் இல்லாமல் ப்ரௌனிக்களாக வெட்டிய மகாலட்சுமி.. ஏன் மேடம் உங்களுக்கு டயட் எல்லாம் இல்லையா?
சென்னை : நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரின் திருமணம் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
இவர்கள் இருவரின் திருமணம் தொடர்ந்து பல மாதங்கள் ட்ரெண்டிங்கிலேயே இருந்தது. இப்போதும் இவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் கமெண்ட்களை பெற்று வருகின்றன.
ஒவ்வொரு விஷயத்தையும் ரவீந்தருடன் இணைந்து செய்துவரும் மகாலட்சுமி தற்போது அவர் இல்லாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Fat Man இல்ல ஸ்பெஷல் மேன்..கணவரை அணு அணுவாக கொஞ்சும் மகாலட்சுமி!

நடிகை மகாலட்சுமி
சீரியல் நடிகை மகாலட்சும் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக இவர்களது திருமணம் மாறியது. தொடர்ந்து இவர்களை சுற்றி பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. காசுக்காகத்தான் மகாலட்சுமி ரவீந்தரை கல்யாணம் செய்துக் கொண்டாரா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

தொடர்ந்து பேட்டிகள்.. பதிவுகள்
ஆனால் முன்னதாகவே மகாலட்சுமி சொகுசு பங்களா, கார் என செட்டில் ஆனதாக ரவீந்தர் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து இருவரும் இணைந்து பேட்டிகளாக கொடுத்தனர். ஹனிமூனுக்கு செல்லக்கூட நேரம் இல்லாமல் இருவரும் ஒவ்வொரு மீடியாவிற்கும் யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளையும் செய்து ரசிகர்களை கவர்ந்தார் ரவீந்தனர்.

ரொமான்ஸ் போட்டோ
சமீபத்தில்கூட இருவரும் இணைந்து ரொமான்ஸ் செய்த போட்டோவை பகிர்ந்திருந்தனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதும் மகாலட்சுமிக்கு ஒரு மகன் இருப்பதும் கூட பேசுபொருளானது. இதனிடையே ரவீந்தருக்கு சமமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளை மகாலட்சுமியும் செய்து வருகிறார்.

விரைவில் சீரியல் தயாரிப்பு?
இவர் விரைவில் சின்னத்திரையில் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, சீரியல் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரவீந்தருக்கும் தயாரிப்புப் பணிகளில் உறுதுணையாக இருக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அழகான வில்லியை சின்னத்திரை மிஸ் செய்யும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

ப்ரௌனிக்களாக சாப்பிட்ட மகாலட்சுமி
இந்நிலையில் தற்போது மகாலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பிரபல கடையொன்றில் பலவிதமான டெசர்ட்களை ஆர்டர் செய்து ரவீந்தர் இல்லாமல் தனியாக சாப்பிடுகிறார். பலவிதமான ப்ரௌனிக்களையும் மகாலட்சுமி சாப்பிடுவதைப் பார்த்த ரசிகர்கள் நாக்கில் நீர் ஊற கமெண்ட்களை பதிவு செய்தனர்.

வித்தியாசமான ப்ரௌனிக்கள்
இந்த வீடியோவில் பாதாம் ப்ரௌனி, வால்நட் ப்ரௌனி, சாக்லேட் ப்ரௌனி உள்ளிட்ட பலவிதமான டெசெர்ட்களை மகாலட்சுமி ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், ஒரு சாக்லேட்டே சாக்லேட் சாப்பிடுகிறதே.. அடடே ஆச்சர்யக்குறி என்று பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் கமெண்ட்
மேலும் உங்க ஹஸ்பண்ட்க்கும் ஊட்டி விட்டுருக்கலாம் என்றும் ஒரு சிலர் உங்க ஹஸ்பண்ட் மாதிரியே மாற ட்ரை பண்றீங்க போல என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோவில் கலர்புல்லான ப்ரௌனிக்களை காட்டிலும் அதை சாப்பிட்ட மகாலட்சுமி கொடுத்த ரியாக்ஷன்கள் மேலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை பெற்றுத் தந்துள்ளது.