அந்த ரூட்டே வேண்டாம்.. இதுதான் ஸ்கெட்ச்.. நடிகருக்கு நாற்காலி ஆசையை விதைத்த அரசியல் புள்ளி

By Staff

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில வாரங்களாக ஒரே ஒரு நடிகரின் அரசியல் நகர்வுகள் பற்றிய பேச்சுதான் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர் மன்றத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது, சமூக நலப் பணிகளை அதிகரிப்பது, மக்கள் மத்தியில் ரசிகர்களை செயல்பட வைப்பது என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாமே, அவர் சினிமாவைத் தாண்டி பெரிய இலக்கை நோக்கி நகர்கிறார் என்ற விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில், அந்த நடிகரின் அரசியல் பயணத்துக்குப் பின்னால் ஒரு முக்கிய அரசியல் புள்ளி இருப்பதாக கோலிவுட்டில் புதிய கிசுகிசு பரவி வருகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வெற்றிகரமாக வந்த மற்றொரு நடிகர் பின்பற்றிய பாதையை அப்படியே காப்பியடிக்க வேண்டாம் என்பதுதான் அந்த அரசியல் புள்ளியின் முதல் அறிவுறுத்தலாக இருந்ததாம். "அவருடைய ரூட் வேறு... உங்களுக்கு தனி ஸ்கெட்ச் இருக்கிறது" என்று நேரடியாகவே கூறியிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதன்படி, ரசிகர் மன்றத்தை வெறும் கொண்டாட்ட அமைப்பாக அல்லாமல், சமூக சேவை அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறதாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொடர்பை அதிகரிக்க வேண்டும், உள்ளூர் பிரச்சினைகளில் குரல் கொடுக்க வேண்டும், ரசிகர்கள் சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் தற்போது வகுக்கப்பட்டிருக்கும் திட்டம் என கூறப்படுகிறது.

Top Political Strategist Guiding Popular Actor s Political Entry New Kollywood Buzz Fuels Speculation

அரசியல் வகுப்பு: அதுமட்டுமல்லாமல், இனிமேல் அந்த நடிகர் தேர்வு செய்யும் படங்களிலும் பெரிய மாற்றம் இருக்குமாம். வெறும் கமர்ஷியல் கதைகளை விட, சமூக பிரச்சினைகள், மக்களின் வாழ்க்கை, அரசியல் சாயல் கொண்ட கதைகள், கருத்து சொல்லும் திரைக்கதைகள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல். இதோடு முடிவடையவில்லை. அரசியலுக்கு வர விரும்பும் ஒருவரின் ரசிகர்கள் எப்படி செயல்பட வேண்டும், சமூக வலைதளங்களில் எப்படி பதிலளிக்க வேண்டும், பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனித்தனி பயிற்சி முகாம்களும் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர் அரசியல்: கடந்த காலங்களில் சில நடிகர்களின் ரசிகர்கள் மீது எழுந்த விமர்சனங்கள், எதிர்மறை பிம்பங்கள் போன்றவை இந்த நடிகரின் அரசியல் பயணத்தில் உருவாகக் கூடாது என்பதில் அந்த அரசியல் புள்ளி மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான், ஆரம்பத்திலிருந்தே கட்டுக்கோப்பான ரசிகர் அமைப்பை உருவாக்கும் வேலைகள் அமைதியாக நடந்து வருகிறதாம். உடனடியாக தேர்தல் வெற்றியை நோக்கி ஓடுவது அல்ல, நீண்ட கால அரசியல் முதலீடுதான் இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் இல்லையென்றாலும், அதற்கு அடுத்த அரசியல் சுற்றில் இந்த நடிகரை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும் என்பதுதான் முழு திட்டமாம்.

ரூட்டை விட ஸ்கெட்ச்: ஆனால், சமீப காலமாக அந்த நடிகரின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருவதால், இந்தப் பேச்சுகளும் வேகமாக பரவி வருகின்றன. "ரூட்டை" விட "ஸ்கெட்ச்" முக்கியம் என்று சொல்லப்படும் இந்த புதிய அரசியல் கணக்கு, அடுத்த சில ஆண்டுகளில் எந்த மாதிரியான திருப்பத்தை உருவாக்கப் போகிறது என்பதுதான் இப்போது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X