நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு

திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், இன்று காலை நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது.
ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உண்மையை அறிய நாம் நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார்.
இப்படியெல்லாமாப்பா வதந்தி கிளப்புவது...?


Click it and Unblock the Notifications











