ஜெனிலியா ரகசியத் திருமணம்?

By Chakra

Genelia with Rithesh
நடிகை ஜெனிலியாவும் மராட்டிய முன்னாள் முதல்வர் மகனும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பாக செய்தி வெளியாகியுள்ளது.

தெலுங்கு படஉலகின் முன்னணி நடிகை ஜெனிலியா. தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய்யுடன், வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண் டிருக்கிறார். இந்திப் படங்களிலும் நடிக்கிறார்.

ஜெனிலியாவும், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஸ்முக் மகன் ரிகேஷ் தேஷ்முக்கும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். அவர்கள் காதலுக்கு ரிதேஷ் தேஷ்முக் குடும்பத்தில் எதிர்ப்பு உள்ளது.

நடிகையை திருமணம் செய்யக் கூடாது என்று அவர்கள் கண்டித்து வருகின்றனர். இதனால் காதல் ஜோடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்க்கின்றனர். ஏற்கெனவே ஒருமுறை கோவா சர்ச்சில் இருவரும் ரகசியமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேஷ்முக் குடும்பத்தினர் அதைக் கண்டுபிடித்து தடுத்து விட்டனர். ஜெனிலியா மட்டும் சர்ச்சிலேயே நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இருந்தாலும் ஜெனிலியாவும் ரிதேஷும் எதிர்ப்புகளை மீறி காதலைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஜெனிலியாவும், ரிதேஷும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் திடீர் வதந்தி பரவியுள்ளது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்றும், உறவினர்கள் யாரையும் அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு, இந்திப் பட உலகில் இந்த வதந்தி வேகமாக பரவியுள்ளது.

இந்த ரகசிய திருமணம் வதந்தியை ஜெனிலியா மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கும், ரிதேஷ்தேஷ் முக்குக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பரவிய வதந்தியால் அதிர்ச்சியா னேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள வில்லை. இந்த வதந்தியை கிளப்பி விட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. ஏன்தான் இப்படியெல்லாம் புரளி கிளப்புகிறார்களோ? இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று புரியவில்லை.

காதல் எனது சொந்த விஷயம். அதை வெளியில் பேச வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகளை பற்றி கிசு கிசுக்கள் வருவதது சகஜம்தான். ஆனால் திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புவதைத்தான் பொறுக்க முடியவில்லை. எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன்..." என்றார்.

இந்த செய்திக்கு கருத்து சொல்லவே விரும்பவில்லை என்று ஜெனிலியாவின் காதலர் ரிதேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X