பியாவை லவ்வும் பிரேம்ஜி!

கோவா படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் துளிர்த்ததாம். பின்னர் ஒரு சுப நாளில் இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டார்களாம்.
இது குறித்து இப்படிச் சொல்கிறார் பிரேம்ஜி:
"நான் பியாவை லவ் பண்றது உண்மைதான். அவரும் என்னை அதே அளவு தீவிரத்துடன் காதலிக்கிறார். அவரை காதலிக்கும் விஷயத்தை நான்தான் முதலில் சொன்னேன். அதற்கு பியாவிடமிருந்து கிரீன் சிக்னல் வந்ததால்... காதல் தொடர்கிறது. இந்த பரவசத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை" என்கிறார் பிரேம்ஜி.
இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம்.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பூச்சாண்டி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி.
Comments


Click it and Unblock the Notifications