ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்!

ஆண்ட்ரியா கொடுத்த புகார் காரணமாக இயக்குநர் செல்வராகவனை 'கழுத்தைப் பிடித்து' வெளியில் தள்ளினர் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள்.

இந்த பரபரப்புச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.

மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகம்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிவது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் சென்னையின் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு டிஸ்கொத்தேயில் பங்கேற்று டான்ஸ் ஆட ஆண்ட்ரியா விரும்பியிருக்கிறார். ஆனால் டான்ஸ் ஆட வேண்டாம் என செல்வராகவன் தடுத்துவிட்டாராம். மனைவியா என்ன சொன்னதும் அதைக் கேட்டு நடக்க...! செல்வராகவன் பேச்சை சட்டை செய்யாமல் ஆண்ட்ரியா டிஸ்கொத்தே ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், அவரை தடுத்து இழுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆண்ட்ரியா ஹோட்டல் நிர்வாகியிடம் செல்வராகவன் மீது புகார் செய்தாராம்.

உடனே அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செல்வராகவனை வெளியே செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, பலவந்தமாக இழுத்துச் சென்று வெளியே விட்டுள்ளனர். இச்சம்பவம் ஹோட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிக் கேட்டால் பதிலேதும் சொல்லாமல் போனைத் துண்டித்துக் கொண்டார் செல்வராகவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X