தமன்னாவின் பேராசை!

ஜெயம் ரவி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு என்பதால் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாரம் அம்மணி.
இதுவரை ரூ.55 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்தவர், சுறா படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளம் பேசியுள்ளார். ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்துக்கும் இதேதான் சம்பளமாம்.
பையா படத்தில் குறிப்பிட்ட தொகைக்கு முதலில் ஒப்புக் கொண்ட தமன்னா, இப்போது 'என் ரேஞ்சுக்கு அது ரொம்ப குறைச்சலாச்சே' என்று ரொம்ப பீல் பண்ணுகிறாராம். அதனால் லிங்குசாமியிடம், என்னுடைய இப்போதைய ரேட்டைக் கொடுக்க முயற்சி பண்ணுங்க என்று கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.
இந்த நேரம் பார்த்து அவருக்கு கமல் பட வாய்ப்பு வேறு வந்திருப்பதால், சம்பள வரம்பை 1 கோடியுடன் நிறுத்தலாமா... இன்னும் உயர்த்தலாமா என ஆலோசித்து வருகிறாராம்.
இன்னொரு பக்கம், 'மார்க்கெட்டில் பரபரவென இருக்கும் போதே ஒரு விருதை வாங்கிப் போட்டாதான் ஆச்சு' என அவரது அபிமானிகள் சில ஆலோசனை சொல்லிவிட்டதால், "இந்தப் படத்துல எனக்கு விருது கிடைக்கும்ங்கற ஹோப் இருந்தா, சம்பளத்துல கன்செஷன் தர்றேன்" என்று புதிதாய் கதை சொல்லும் இயக்குநர்களிடம் தூண்டில் வீசுகிறாராம்.


Click it and Unblock the Notifications











