வீடியோ.. விவேக் மீது த்ரிஷா அம்மா பாய்ச்சல்

இந்த வீடியோ- புகைப்படங்கள் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இவை அனைத்தும் போலியானவை என்பதை நிலைநாட்ட, ரொம்ம்ம்ப கஷ்டப்பட்டு த்ரிஷாவும் அவரது அம்மாவும் பட்ட பாடு கொஞ்சமல்ல.
ஆனால் விவேக்கோ, இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்ற அர்த்தத்திலேயே பேசினார்.
"...த்ரிஷா குளிக்கும்போது போட்டோ, வீடியோ எடுத்து அதை பத்திரிகையில போடறீங்களே, குளிக்கும்போது ட்ரெஸ் இல்லாமத்தாண்டா குளிப்பாங்க... ங்கொக்கா குளிக்கிறப்ப நிர்வாணமா போட்டோ எடுத்துப் போடறதுதானே" என்ற அரிய தத்துவத்தைக் கக்கியிருந்தார்.
இது த்ரிஷாவை செம கடுப்பேற்றியுள்ளது. அதிலும் அவரது அம்மா உமா கிருஷ்ணன், கோபத்தின் உச்சிக்கே போய் விவேக்கை லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.
"ஏன்யா... அந்த வீடியோ, போட்டோல இருக்கிறது த்ரிஷா இல்லன்னு நாங்களே கஷ்டப்பட்டு நிரூபிச்சிட்டு வந்திருக்கோம். போலீசாரும் அதன் அடிப்படையில சைபர் பிரிவு மூலமா நடவடிக்கை எல்லாம் எடுத்தாங்க. அதெல்லாம் தெரியலியா உனக்கு... இப்ப எதுக்கு அவ குளியல் போட்டோ விவகாரத்தை இழுத்துவிட்ட... நியாயமா உன்மேலதான் மான நஷ்ட வழக்குப் போடணும்... இனி த்ரிஷா நடிக்கிற படத்துலயே நீ இருக்கவே கூடாது..." என்று அவர் விட்ட சவுண்டில், இவர் டர்ராகிப் போனாராம்.
இனி த்ரிஷா நடிக்கும் படங்களில் விவேக் இருக்க மாட்டார்!


Click it and Unblock the Notifications











