சின்சியரான மீடியேட்டர் தேடும் காமெடி பீஸு!
நிஜ வாழ்க்கையிலும் காமெடி பீஸாகிவிட்டார் 'பிரா ஜட்டி' புகழ் காமெடியன்.
பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தும் படத்தில் ரொம்ப நாளாக தீவிர முயற்சி செய்தும் ஒன்றும் வேலைக்காகவில்லை. முதல்வரிடம் சொல்லி, யாரையும் சாதகமாக செய்தி போட வைக்கவும் முடியாது.
கவிப்பேரரசு தொடங்கி, பார்ட்டிக்கு தலையாட்டும் மீடியா தூதுவர்கள் வரை எத்தனையோ பேர் மூலம் முயர்சித்தும் பலன் பூஜ்யம்தானாம்.
இந் நிலையில் திடீரென்று ஒருநாள் எல்லோருக்கும் விளக்கக் கடிதம் என்ற பெயரில் ஒன்றை அனுப்பிப் பார்த்தது 'பிரா ஜட்டி'. ஆனால் அப்படி ஒரு விளக்கக் கடிதம் வந்ததற்கான அறிகுறியையே ஒருத்தரும் காட்டியதாகத் தெரியவில்லை.
அவர் பாணியிலேயே நொந்து நூடுல்ஸாகி, அந்து அவலாகி, நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் போனாராம்.
தலைவர் அப்புறம் பார்க்கலாம் என ஒதுங்க, இன்னொரு முக்கியப் பிரமுகரோ, 'நிறைய கைத்தட்டல் வேணும்னு நீ கட்டுப்பாடில்லாம பேசிட்ட... இப்ப எல்லாருக்கும் தொல்லை. சரி, சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன்கிட்டேயே சமாதானம் பேசலாம்' என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை நிர்வாகத்தினரை பேச வரச்சொன்னாராம்.
தகவல் கிடைத்ததும் செம டென்ஷனான நிர்வாகம், 'யார் அந்தாளு..?' என சிம்பிளாகக் கேட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பதில் தீவிரமாகிவிட்டதாம். தூது போனவருக்கு ஈடாவில்லையாம் முகத்தில்!


Click it and Unblock the Notifications











