தீபிகாவின் காதல் வலையில் மல்லையா மகன்-எடையைக் குறைத்து 'ஸ்லிம்'

By Sudha

Siddharth Mallya and Deepika
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்தனர். அது பழங்கதையாகி விட்டது. இப்போது இருவரும் 'டூ' விட்டு விட்டனர், தனித் தனிப் பாதையில் போக ஆரம்பித்துள்ளனர்.

அதை விட ஹாட்டான விஷயம், தீபிகாவும், விஜய் மல்லையா மகன் சித்தார்த்தும், 'செளஜன்யமாக' பழகி வருவதுதான். இருவரும் தீவிர காதலில் மூழ்கியிருக்கிறார்களாம்.

எங்கு பார்த்தாலும் இருவரும் ஜோடியாகவே போகின்றனராம், ஜோடியாகவே வருகின்றனராம். நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் இரவு நேர விருந்துகளில் மறக்காமல் கலந்து கொள்கின்றனர்.

அங்கு நடக்கும் நடனங்களில் இருவரும் கைகோர்த்து ஆடுகின்றனர். தீபிகாவோ ஒல்லிக் குச்சி உடம்புக்காரி, 'சைஸ் ஜீரோ'வில் இருப்பவர். ஆனால் சித்தார்த் மல்லையாவோ 'சைஸ் பீரோ'. மனப் பொருத்தம் ஓ.கே, உடல் பொருத்தம் இல்லையே என்று யோசித்த தீபிகா, சித்தார்த்தை உடற்பயிற்சி செய்து உடம்பை குறைக்கச் சொல்லி உள்ளார் தீபிகா.

காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது?. அவரும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து கனிசமான அளவு உடல் எடையை குறைத்து, ஸ்லிம் ஆகியுள்ளாராம்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தீபிகா, சித்தார்த்தை பார்த்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்று கூற, குஷியாகி விட்டாராம் சித்தார்த்.

பிடித்தாலும் புளியங் கொம்பாகத்தான் பிடித்திருக்கிறார் தீபிகா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X